சென்னை: செப்டம்பர் 7ம் தேதி ராகுல் காந்தி தமிழகம் வருகிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். சென்னை வரும் ராகுல் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். குமரி முதல் காஷ்மீர் வரையிலான பாத யாத்திரையை அவர் தொடங்கி வைக்க உள்ளார் என தெரிவித்தார்.
