சென்னை: தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தை பார்த்து விட்டு இயக்குநர் செல்வராகவன் கொடுத்துள்ள விமர்சனம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.
இயக்குநர் செல்வராகவனின் உதவி இயக்குநரான மித்ரன் ஆர் ஜவகர், செல்வராகவன் தெலுங்கில் இயக்கிய படத்தை தமிழில் யாரடி நீ மோகினி என இயக்கி இயக்குநராக அறிமுகமானார்.
தம்பி தனுஷ் மற்றும் சிஷ்யம் மித்ரன் ஜவகரின் திருச்சிற்றம்பலம் படத்துக்கு செல்வரகாவன் என்ன சொல்லியிருக்காருன்னு தெரிஞ்சிக்கலாம் வாங்க..
செல்வராகவன் விமர்சனம்
என்ன ஒரு அழகான படம், இப்படியொரு ஃபீல் குட் படத்தை சமீபத்தில் நான் பார்த்ததே இல்லை. தனுஷ், நித்யா மேனன், பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜின் நடிப்பு அப்படியே மெய்சிலிர்க்க வைத்து விட்டது. அனிருத்தின் அந்த இசை அப்படியே வைப் கொடுத்து ரசிக்க வைத்து விட்டது என தம்பி தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தை பாராட்டித் தள்ளி இருக்கிறார் இயக்குநர் செல்வராகவன்.

சிஷ்யனை நினைத்து பெருமை
ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் அழகான தருணங்களை அற்புதமாக காட்சிப்படுத்தி உள்ளார் என்றும் தனது சிஷ்யன் மித்ரன் ஆர் ஜவகரை எண்ணி பெருமைப்படுவதாகவும் கூறியுள்ளார். எப்படி இப்படியொரு க்யூட்டான ஹார்ட் டச்சிங் படத்தை எடுத்துருக்க என பாராட்டி உள்ளார்.

சோபனா எல்லாருக்குமே கிடைக்கணும்
மித்ரன் ஆர் ஜவகர் உருவாக்கிய சோபனா போன்றதொரு தோழி அனைவரது வாழ்க்கையிலும் கிடைக்க வேண்டும் என்றும் தனது ட்வீட்டில் பதிவிட்டு இருக்கிறார் இயக்குநர் செல்வராகவன். படம் பார்த்த அனைவரும் நித்யா மேனனை பாராட்டி வருகின்றனர். ராஷி கன்னா மற்றும் பிரியா பவானி சங்கர் தங்களுக்கு கொடுத்த கதபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர்.

நானே வருவேனுக்கு வெயிட்டிங்
தனுஷின் திருச்சிற்றம்பலம் சூப்பர் ஹிட் அடித்துள்ள நிலையில், செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் நானே வருவேன் படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பதாகவும், அந்த படத்தின் டீசர் மற்றும் அப்டேட்களை விரைவில் வெளியிடுங்க என்றும் செல்வராகவனுக்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஆயிரத்தில் ஒருவன் 2வை ஆரம்பிங்க
நானே வருவேன் படத்தை சீக்கிரம் முடித்து ரிலீஸ் செய்து விட்டு ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தையும் உடனடியாக ஆரம்பித்து மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்க வேண்டும் சார் என செல்வராகவனிடம் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். புதுப்பேட்டை 2 படமும் இவர்கள் கூட்டணியில் உருவாக காத்திருக்கிறது.

தனுஷ் லைன் அப்
தமிழ், தெலுங்கு பைலிங்குவலாக உருவாகி வரும் வாத்தி, நானே வருவேன், ஹாலிவுட்டில் மீண்டும் தி கிரே மேன் சீக்வெல், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கேப்டன் மில்லர், புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 என நடிகர் தனுஷின் லைன் அப் ரொம்பவே பெருசாகவும் பிரம்மாண்டமாகவும் உள்ளது.