மத்திய மின் அமைச்சகம் மின் உற்பத்தியாளர்களுக்கு ரூ.5,085 கோடி பாக்கியைச் செலுத்தாததற்காக 13 மாநிலங்களுக்கு ஸ்பாட் சந்தையில் இருந்து மின்சாரம் வாங்கவோ விற்கவோ வியாழக்கிழமை தடை விதித்துள்ளது.
மின் அமைச்சகத்தின் ஒரு அமைப்பான பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் (POSOCO) முதல் முறையாக மின்சாரம் விதிகளை 2022 ஐ பயன்படுத்தி டிஸ்காம்களைத் மாற்று குறுகிய கால ஆதாரங்களில் இருந்து தடுக்க உத்தரவிட்டு உள்ளது. மின்சாரம் விதிகள் 2022 என்பது தாமதமாகச் செலுத்தும் சர்சார்ஜ் மற்றும் அதைத் தொடர்புடைய விஷயங்களுக்கான விதிகள்.
மத்திய மின் அமைச்சகத்தின் தடை பட்டியலில் தென்னிந்தியாவின் 4 மாநிலங்கள் உள்ளது.
இந்தியா சீனா மட்டும் அல்ல.. மியான்மரும் இனி அப்படி தான்.. கடுப்பில் மேற்கத்திய நாடுகள்!
மத்திய மின் அமைச்சகம்
ஜூன் மாதம் மத்திய மின் அமைச்சகம் அனைத்து மாநிலத்தின் மின்சாரப் பகிர்மான நிறுவனங்களையும் மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய நிலுவை தொகைக்கான லேட் பேமெண்ட் சர்சார்ஜ் தொகையை உடனடியாகச் செலுத்த அறிவுறுத்தியது.
லேட் பேமெண்ட் சர்சார்ஜ்
இந்நிலையில் லேட் பேமெண்ட் சர்சார்ஜ் தொகையைச் செலுத்தாத ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, தெலுங்கானா, மனிப்பூர், மிசோரம், கர்நாடகா, பிகார், ராஜஸ்தான், ஜார்கண்ட், ஜம்மூ காஷ்மீர், மத்திய பிரசேதம், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர் ஆகிய 13 மாநிலங்களை ஸ்பாட் சந்தையில் மின்சாரத்தை வாங்கவோ, விற்பனை செய்யக் கூடாது எனத் தடை விதித்துள்ளது.
தமிழ்நாடு
இதில் தமிழ்நாட்டின் மின்சாரப் பகிர்மான நிறுவனம், மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டிய நிலுலை தொகை 926 கோடி ரூபாய். மேலும் லேட் பேமெண்ட் சர்சார்ஜ் மீதான வட்டி விகிதம் ஒவ்வொரு மாத தாமதத்திற்கும் 0.5 சதவீதம் அதிகரிக்கும். இதேபோல் இந்த வட்டி விகிதம் 3 சதவீதத்தைத் தாண்டக் கூடாது என்பது மற்றொரு நிபந்தனை.
தெலுங்கானா
இந்த 13 மாநிலங்களில் தெலுங்கானா தான் அதிகப்படியான நிலுவை அதாவது 1,381 கோடி ரூபாய் அளவிலான நிலைவை தொகையை வைத்துள்ளது. இந்தத் தொகையைத் தொடர்ந்து செலுத்தாமல் இருக்கும் பட்சத்தில் குறுகிய மின்சாரக் கொள்முதலை மொத்தமாகத் தடை செய்ய வேண்டிய நிலைப்பாடும் உருவாகும் என்ற கருத்து நிலவுகிறது.
சைலேந்திர துபே
இதுகுறித்து அனைத்திந்திய மின்சாரப் பொறியியலாளர் அமைப்பின் தலைவரான சைலேந்திர துபே கூறுகையில் மாநில அரசுகள் மானியத்தின் கீழ் சுமார் 76000 கோடி ரூபாயை மின் பகிர்மான நிறுவனங்களுக்கு அளிக்கப்படாமல் உள்ளது, இதேபோல் 67,000 கோடி ரூபாயை பல்வேறு அரசு அமைப்புகள் கட்டணத்தை நிலுவையில் வைத்துள்ளது எனச் சைலேந்திர துபே கூறுகிறார்.
1,43,000 கோடி ரூபாய்
இந்த 1,43,000 கோடி ரூபாயை முறையாகச் செலுத்தப்படும் போது டிஸ்காம் நிறுவனங்கள் அதாவது மாநிலங்களின் மின் பகிர்மான நிறுவனங்கள் கட்டாயம் மின்சார உற்பத்தி நிறுவனத்திற்கு நிலுவை தொகையை அளிக்கும் எனத் தெரிவித்துள்ளார் சைலேந்திர துபே.
How much tamilnadu have pending dues to power generators; Power ministry bans 13 states from spot market
How much Tamilnadu have pending dues to power generators; Power ministry bans 13 states from spot market தமிழ்நாட்டுக்கு மத்திய மின்சாரத் துறை போட்ட தடை.. நிலுவை தொகை எவ்வளவு தெரியுமா..?