தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடிய போதை ஆசாமி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா தீயணைப்பு நிலைய அதிகாரி முனீஸ்குமாருக்கு கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா பாலவிடுதி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கிணற்றில் விழுந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவரது மனைவி புகார் அளித்து இருந்தார். உடலை மீட்டு தரம்படி கேட்டு மனைவி கொடுத்த புகாரில் பேரில் காலை 11:30 மணிக்கு சென்று கிணற்றுக்குள் இறங்கிய வீரர்கள் ஒரு பக்கம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மறுபக்கம் நவீன கேமராவை கிணற்றுக்குள் இறக்கி உடல் எங்கு கிடைக்கிறதா என்று தேடிக் கொண்டிருந்தனர்.

கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தேடப்பட்டு வந்த ராஜாமணியின் மனைவி சித்ரா அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில் விரைந்து வந்த அவரது உறவினர்கள் சொந்தம் பந்தம் அனைவருக்கும் ராஜாமணி இறந்துவிட்டார் என்று தகவல் தெரிவித்து வீட்டின் முன்பாக பந்தல் போட்டு மைக் செட் கட்டி ட்ரம் செட் காரர்களை வரவழைத்து உடல் கிடைத்ததும் இறுதி சடங்கு செய்ய தயார் நிலையில் காத்திருந்தனர்.

இந்த நிலையில் தீயணைப்பு நிலைய அதிகாரி முனீஸ்குமரன் தலைமையிலான வீரர்கள் மதியம் மூன்று முப்பது மணி வரையிலும் தண்ணீர் குடிக்காமலும் உணவு அருந்தாமலும் பசி பட்டினியுடன் ராஜாமணியின் உடலை தேடி வந்த நிலையில் அப்பொழுது அங்கு வந்த ஆசாமி ஒருவர் நீங்கள் தேடிக் கொண்டிருக்கும் நபர் செம போதையில் தோப்புக்குள் படுத்து இருக்கிறார் என்று தகவல் தெரிவித்தார். இதை அடுத்து பாலவிடுதி காவல்துறையினர் மற்றும் குஜிலியம்பாறை தீயணைப்புத் துறையினர் சென்று பார்த்த பொழுது அவர் அங்கே செம போதையில் ஹாயாக படுத்திருப்பதை கண்டுபிடித்து அவரை மீட்டு அவரது மனைவியிடம் ஒப்படைத்தார். பின்னர் தீயனைப்புதுறையினர் குஜிலியம்பாறை வந்தடைந்தனர்.

எனவே குடிபோதை ஆசாமி செய்த கலாட்டாவால் பாலவிடுதி காவல்துறையினரும் குஜிலியம்பாறை தீயணைப்புத் துறையினரும் பசி பட்டினியோடு பணியாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.