ஒவ்வொரு நாளும் சமூக ஊடகங்களில் பல விலங்குகளின் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வரிசையில் கால்கலால் நடக்கும் பாம்பு வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தையே அதிர வைத்து வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களில் ஐஎஃப்எஸ் அதிகாரிகள் பகிரும் எந்த ஒரு வன விலங்குகள் வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகத் தவறியதே இல்லை. பொதுவாகவே மனிதர்களுக்கு வன விலங்குகள் மீது ஒரு ஆர்வம் இருந்து கொண்டே இருக்கிறது. அதற்கு காரணம், வன விலங்குகளை அதன் இயல்போடு, நாம் அருகே சென்று பார்க்க முடியாது என்பதுதான். ஆனால், விலங்கியல் பூங்காக்களில் மட்டும் பார்க்கலாம்.
எப்போதும் மனிதர்களுக்கு தாங்கள் பயப்படுகிற ஒரு விஷயத்தின் மீது ஆர்வம் இருந்துகொண்டே இருக்கும். அந்த வகையில், பாம்பு என்றால் பெரும்பாலானவர்கள் பயப்படவே செய்வார்கள். ஆனால், பாம்பு படம் என்றால் ஆர்வமாகப் பார்ப்பார்கள். அதே போலதான், இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் பாம்பு வீடியோ என்றாலே வைரலாகி லைக்குகளும் கம்மெண்ட்ஸ்களும் பிச்சிக்கும்.
அந்த வரிசையில், ஊர்ந்து செல்லும் பாம்பு வித்தியாசமாக கால்களால் நடக்கிறது என்று சொன்னால் அந்த வீடியோ எப்படி வைரலாகும் என்று யோசித்துப் பாருங்கள். அப்படி பாம்பு கால்களால் நடக்கிற வீடியோ ஒன்று எக்கச்சக்கமாக வைரலாகி வருகிறது.
நீங்கள், என்ன பாம்பு கால்களால் நடக்கிறதா, நம்பமுடியவில்லை என்று சொல்வது எங்களுக்கும் கேட்கிறது. ஆனால், ஒரு பாம்பு கால்களால் நடக்கிற வீடியோ யூ டியூபில் வெளியாகி உள்ளது.
யூடியூப்பில் வெளியாகியுள்ள இந்த வீடியோவை பார்த்து அனையவும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். கால் உள்ள பாம்பை நீங்களே பாருங்கள். கால்களால் நடக்கும் பாம்பு பற்றி தெரிந்கொல்வதகு முன், இந்த வீடியோவை முழுமையாகப் பாருங்கள்.
இந்த வீடியோவில், பாம்புகளை நேசிக்கும் ஒரு பொறியாளர் தனது அறிவை பயன்படுத்தி, பாம்புகளுக்கு கால்களைக் கொடுத்திருக்கிறார். அதற்காக, ஒரு இயந்திரத்தை உருவாக்கி இருக்கிறார்.
இந்த வீடியோவின் முடிவில், ஒரு பாம்பு இயந்திரக் கால்கள் உதவியுடன் நடந்து செல்வதைப் பார்க்கும்போது நம் கண்களை நம்மாலேயே நம்ப முடியவில்லை.
பாம்பு கால்களால் நடக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பாம்பு எப்படி கால்களால் நடக்கிறது என்று பார்க்கலாம் என்ற ஆர்வத்தில் நெட்டிசன்கள் படையடுத்ததால், இந்த வீடியோ லட்சக் கணக்கான பயனர்களால் பார்க்கப்பட்டு லைக் செய்து பகிரப்பட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”