புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் நேற்று விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
உன்னாவ் பாலியல் வன் கொடுமை வழக்கில், பாஜக எம்எல்ஏவை காப்பாற்ற பணியாற்றினீர்கள். கதுவா, ஹாத்ரஸ் மற்றும் குஜராத்தில் பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகளுக்கு ஆதரவு அளிப்பது பெண்களுக்கு எதிரான பாஜக.வின் மனநிலையை காட்டுகிறது. இது போன்ற அரசியல் செய்வதற்காக நீங்கள் வெட்கப்படவில்லையா பிரதமர் அவர்களே. இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறுகையில், “குஜராத்தில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் 11 பேர் தண்டனையை குறைப்பதற்கான ஆய்வுக் குழுவில் பாஜக. எம்எல்ஏ.க்கள் ராலிஜி, சுமன் சவுகான் இடம் பெற்றுள்ளனர். மற்றொரு உறுப்பினர், கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு விசாரணையில் முக்கிய சாட்சியாக இருந்த முரளி முல்சந்தானி” என குறிப்பிட்டுள்ளார்.