ஜார்கண்ட் வேளாண்மை இயக்குனகரம் மற்றும் பிளாக்செயின் தொழில் நுட்ப நிறுவனமான செட்டில் மிண்ட் ஆகியவை, பிளாக்செயின் அடிப்படையிலான தளத்தை பயன்படுத்தி விவசாயிகளுக்கு சப்ளை செய்து வருவதாக அறிவித்துள்ளது.
பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் பணபரிவர்த்தனை, நிதி துறை சம்பந்தமான வணிகம் என பலவற்றில் பயன்படுத்தியதை பற்றி கேள்வி பட்டிருப்போம். ஆனால் விசாயிகளுக்கு விதையை வழங்குவதில் பிளாக்செயின் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தியிருப்பது ஜார்ஜ்கண்ட் தான்.
யார் இந்த ஜமீல் அகமது.. இவர் தான் பாகிஸ்தான் மத்திய வங்கியின் புதிய தலைவரா?

என்ன காரணம்?
இதன் மூலம் சரியான விதைகளை விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்க முடியும். மேலும் சந்தையில் உள்ள போலி விதைகளை அகற்றவும் முடிவும். அதோடு ஓரிடத்தில் அதனை தேக்கி வைப்பதையும் குறைக்க முடியும் என்பதை கருத்தில் கொண்டு, இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மானிய விலையில் விதை
தற்போதைய நிலவரப்படி 3 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். 30,000 குவிண்டால் மதிப்பிலான விதைகள் இதன் மூலம் சப்ளை செய்யப்பட்டுள்ளன. ஜார்கண்ட் 30க்கும் மேற்பட்ட பயிர்களில், 300-க்கும் மேற்பட்ட விதை வகைகளை காரிஃப் மற்றும் ராபி பருவத்திலும் மானிய விலையில் விநியோகித்துள்ளது.

நடப்பு பருவத்தில்?
நடப்பு காரிஃப் பருவத்தில் தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்து விதைகள் உள்ளிட்ட பலவற்றையும் பிளாக் செயின் தொழில் நுட்பம் மூலமாக விற்பனை செய்துள்ளது.
இந்த தொழில்நுட்பம் சப்ளை எவ்வளவு செய்யப்பட்டுள்ளது உள்ளிட்ட பல விவரங்களையும் கண்கானிக்கிறது. இதன் மூலம் விதையிருப்பு கண்கானித்தல் உள்ளிட்டவற்றையும் கண்கானிக்கிறது.

விவரங்ககளை கண்கானிக்க உதவும்
இந்த தொழில்நுட்பத்தளத்தில் ஒவ்வொரு விவசாயி உடைய ஆதார் எண் மற்றும் மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளன. அவர்கள் விதை வாங்குபோது அவர்கள் பதிவு செய்த மொபைல் நம்பருக்கு ஓடிபி எண் வரும். இது ஒரு விவசாயி எத்தனை முறை விதை வாங்குகிறார் என்பது உள்ளிட்ட பல விவரங்களையும் கண்கானிக்க உதவும்.

தரமான விதனை
மொத்தத்தில் விவசாயிகளுக்கு தரமான விதையை சரியான நேரத்தில் கொடுப்பது அரசின் முன்னுரிமையாக உள்ளது. ஆக இதன் மூலம் அனைத்து விவ்சாயிகளுக்கும் பலன் சென்றடைய, இது உதவிகரமாக இருக்கும் என்றும் நம்ப்பப்படுகிறது.
Blockchain-based seed delivery program to farmers: Jharkhand’s new approach
Blockchain-based seed delivery program to farmers: Jharkhand’s new approach/பிளாக்செயின் தொழில் நுட்பத்தில் விவசாயிகளுக்கு விதை.. ஜார்கண்டின் புதிய அணுகுமுறை!