பீகாரில் இரு ஆண்டுகளில் ஐந்து லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கினால் எனது ஆதரவு நிதிஷ்குமார் அங்கம் வகிக்கும் மெகா கூட்டணிக்கு தான் என கூறியுள்ளார் தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர்.
தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர் பீகாரைச் சேர்ந்தவர். தேர்தல் வியூகப் பணிகளோடு நிதிஷ் குமாருடன் அரசியலிலும் ஈடுபட்டார். பின்னர் கருத்து வேறுபாடுகாரணமாக பிரிந்தார்.
அண்மையில் பீகார் அரசியலில் அதிரடி மாற்றம் ஏற்பட்டது. பாஜகவுடன் கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறியது. ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடது சாரிகளுடன் அக்கட்சி கூட்டணி அமைத்து மீண்டும் நிதிஷ் குமார் முதலமைச்சராக பதவியேற்றார்.
இறங்கி வந்தாரா எடப்பாடி? இணைப்பை சாத்தியப் படுத்துவாரா ஓபிஎஸ்?
2020 தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் முன்வைத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
அதையே முதல்வர் நிதிஷ் குமாரும் பிரதிபலித்து வருகிறார். சுதந்திர தின உரையில் நிதிஷ் குமார், “அடுத்த இரு ஆண்டுகளில் 5 முதல் 10 லட்சம் அரசு மற்றும் தனியாரில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவோம்” என்று கூறினார்.
இது தொடர்பாக நிதிஷ்குமார் சமஷ்டிபுரில் தனது ஆதரவாளர்களிடம் பேசிய போது. “பீகாரில் அமைந்திருக்கும் புதிய அரசு மக்கள் ஆதரவைப் பெறவில்லை. மாநிலத்தின் அரசியல் 180 டிகிரி திருப்பத்தைப் பெற்றிருக்கிறது. முதலமைச்சர் நாற்காலியில் நிதிஷ்குமார் ஃபெவிகால் போட்டு ஒட்டிக்கொண்டார். அவருக்கு ஆதரவளிக்கும் கூட்டணி கட்சிகள் தான் சுற்றி வருகின்றன.
இரண்டு ஆண்டுகளில் குறைந்தது 5 லட்சம் வேலைவாய்ப்புகளை இந்த அரசு வழங்கினால், நான் என்னுடைய ‘ஜன் சூரஜ் அபியான்’ பிரச்சாரத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டு நிதிஷ் குமார் அரசுக்கு ஆதரவு அளிப்பேன். வரும் காலங்களில் மேலும் பல அரசியல் எழுச்சிகளை பீகார் சந்திக்கும்” என்று கூறினார்.