சர்க்கரை நோய் உள்ளவர்கள் உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் எப்படி குறைப்பது என்றுதான் யோசிக்கிறார்கள். இதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மற்ற சத்துகளை நாம் சாப்பிட வேண்டும் என்பதற்கு அவர்கள் கொடுப்பதில்லை. இதில் முக்கியமான புரோட்டீன் நிறைந்த உணவுகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. நமது தசைகளில்தான் எல்லா புரோட்டீன்களும் இருக்கிறது. புரோட்டீன்களை உடைத்து, அதை குளுக்கோஸாக மாற்றி அதில் கிடைக்கும் ஆற்றலை உடல் சக்தியாக பயன்படுத்துக்கொள்கிறது.
இந்தியா ஒரு கார்போஹைட்ரேட் உணவுகளை விரும்பும் நாடாக இருக்கிறது. ஐசிஎம்ஆர் அறிவுரைப்படி நாம் தினமும் 70 கிராம் புரோட்டீன்களை எடுத்துகொள்ள வேண்டும்.
ஆனால் நாம் இதில் பாதி அளவு கூட எடுத்துகொள்வதில்லை. புரோட்டீன் அதிக சாப்பிடுவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஆபத்து என்று கூறப்படுகிறது. இது முற்றிலும் தவறான கருத்து.
கார்போஹைட்ரேட், புரோட்டீன் ஒன்றாக எடுத்துகொண்டால், சாப்பிட்ட பின்பு ரத்த சர்க்கரை அதிகரிப்பதை தடுக்கும்.
மேலும் குறைந்த புரோட்டீன் , தசைகளை பாதிக்கும். இதனால் எலும்பு முறிவு ஏற்படலாம். மேலும் குறைந்த புரோட்டீன் அளவு, இன்சுலின் சுரப்பதை பாதிக்கிறது. மேலும் பேட்டி லிவர் நோய் ஏற்பட கூட குறைந்த புரோட்டீன் காரணமாக இருக்கிறது.
பால், தயிர், பன்னீர், முட்டை, மீன், மாமிசம் ஆகியவை சிறந்த புரோட்டீன்களை உடலுக்கு வழங்கும்.
பின்வரும் உணவில் இருக்கும் புரோட்டீன் அளவு
100கிராம் சிக்கனில் -30 கிராம்
100 கிராம் மீன்: 22 கிராம்
100 கிராம் சமைக்கப்பட்ட சோயா பீன்ஸ்- 12 கிராம்
ஒரு முட்டை -7 கிராம்
1 கப் பால்- 7 கிராம்
1 கப் பருப்பு- 5-6 கிராம்