பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் வேலைத்திட்டங்களுக்கு அரச, தனியார் பிரிவுகள் உள்ளடங்கலாக மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
எரிசக்தி துறையில் காணப்பட்ட அடிப்படை பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட விரைவான நடவடிக்கையினால், மக்களுக்கு ஓரளவு நிவாரணம் கிடைத்துள்ளது என்றும் அவர் கூறினார். மாகாண ஆளுநர்களுடன் பிரதமர் அலுவலகத்தில் இன்று (19) நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே பிரதமர் தினேஷ் குணவர்த்தன இந்த விடயங்களை தெரிவித்தார்.