யாழ்ப்பாணத்துக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு இன்று (19) விஜயம் செய்துள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாணம் திறந்த பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்து பல்கலைக்கழகத்தின் பிராந்திய கற்கை நிலைய கட்டடத்தையும் திறந்துவைத்தார்
இந்த கட்டடம், அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதி மற்றும், மாணவர்களின் நிதி பங்களிப்போடும் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன், கல்வி அமைச்சின் செயலாளர் எம். என். ரணசிங்க, வடமாகாண செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஸ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, இலங்கை திறந்த பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பீ.எம்.சீ. திலகரத்ன, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன், யாழ்ப்பாணம் திறந்த பல்கலைக்கழக பணிப்பாளர் அதிகாரிகள், விரிவுரையாளர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கலந்து கொண்டனர்.