ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்களுக்கு நாளை அனுமதி சீட்டு வழங்கப்படாது என மீன்வளத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கடலில் 60.கி.மீ. வேகத்தில் காற்றுவீசும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் மீன்பிடி அனுமதி சீட்டு மறுக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டுப்படகு மீனவர்களும் நாளை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.