சர்வதேச அளவில் நிலவி வரும் பணவீக்கத்திற்கு எதிராக சம்பளம் அதிகமாக இருந்தால், யார் தான் வேண்டாம் என்று கூறுவார்கள். அப்படி ஒரு அறிவிப்பினை அமெரிக்க நிறுவனம சமீபத்தில் தனது ஊழியர்களுக்கு, ஆண்டுக்கு குறைந்தபட்சம் 80 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் 63 லட்சம் ரூபாய்க்கு மேல்) என அறிவித்துள்ளது. இதனால் ஏரளாமான விண்ணப்பங்களை பெற்று வருவதாகவும் அறிவித்திருந்தது.
சியாட்டலில் உள்ள கிராவிட்டி பேமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டான் பிரைஸ், தனது ஊழியர்களுக்கு 80,000 டாலர் குறைந்தபட்சம் சம்பளம், எங்கிருந்து வேண்டுமானாலும் பணிபுரியலாம். ஊதியத்துடன் பெற்றோருக்கு விடுமுறை உட்பட பல சலுகைகளையும் அறிவித்தவர்.
தமிழ்நாட்டுக்கு மத்திய மின்சார துறை போட்ட தடை.. நிலுவை தொகை எவ்வளவு தெரியுமா..?

ஊழியர்களுக்கு ஆதரவு
அது மட்டும் அல்ல மற்ற நிறுவனங்களையும் நல்ல சம்பளம் வழங்கவும், சலுகைகளை வழங்கவும் டான் அழைப்பு விடுத்தார். அவர்களுக்கு நியாயமான சலுகைகளை வழங்க வேண்டும். அவர்களை மரியாதையுடன் நடத்துவது முக்கியம் என சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார்.

ராஜினாமா?
அப்படிப்பட்ட தலைமை செயல் அதிகாரியான டான் பிரைஸ் தற்போது தனது CEO பதவியினை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து நிறுவனத்திற்கு மெயில் அனுப்பியுள்ளதாகவும், சிஓஓ- ஆக உள்ள தம்மி க்ரோல் தலைமை நிர்வாகி பொறுப்புக்கு வருவார் என்றும் கூறியுள்ளார். மேலும்

எதற்காக ராஜினாமா?
தான் சில சட்ட சிக்கல்களில் சிக்கியுள்ளதாகவும், இது தன்னை சரியான பணிபுரிய விடாது. கவனச் சிதறல் உள்ளது. ஆக நான் எனது பதவியை விட்டு விலகு முழுமையாகி விலகி, பிரச்சனைகளில் முழுமையாக கவனம் செலுத்த, எதிர்த்து போராடுவதில் கவனம் செலுத்த விரும்புகிறேன். எனது முதல் உரிமை ஊழியர்கள் தான். ஊழியர்களின் எதிர்காலம் முக்கியம். நிறுவனத்தின் எதிர்காலம் ஊழியர்கள். ஆக என கவனசிதறலால் நிறுவனம் பாதிக்க கூடாது. நான் ராஜினாமா செய்கிறேன். நான் எங்கேயும் போகவில்லை என கூறியுள்ளார்.

மனைவியின் குற்றச்சாட்டு
கடந்த 2015ல் பிரைஸின் முன்னாள் மனைவி கெடக்கி பல்கலைக் கழகத்தில் பேசும்போது, தனது முன்னாள் கனவரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். எனினும் இது குறித்து அவர் எதுவும் வெளிப்படையாக கருத்துகளை தெரிவிக்கவில்லை. இதனை பிரைஸ் மறுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

பாலியல் சீண்டல்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் குற்ற சாட்டு எழுந்தது. இது மட்டும் இல்லை, இன்னும் சில சட்ட சிக்கலில்களில் பிரைஸ் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றனர். எனினும் இது குறித்து முழுமையாக விவரங்கள் தெரியவில்லை. ஆதாரப்பூர்வ தகவல்களும் இல்லை.

பல கேள்வி
எது எப்படியோ ஊழியர்கள் நலன் தான் முக்கியம், அவர்கள் நன்றாக இருந்தால் நிறுவனம் வளர்ச்சி காண முடியும் என்ற நினைத்த சிஇஓ இன்று தனது பதிவியினை ராஜினாமா செய்துள்ளார். ஊழியர்களின் எதிர்காலம் முக்கியம். நிறுவனத்தின் எதிர்காலம் ஊழியர்கள் தான் என்று கூறியவர் இன்று இல்லை என்பது பலரின் மத்தியிலும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
Gravity Payments CEO has resigned from his CEO post
Gravity Payments CEO has resigned from his CEO post/ரூ.63 லட்சம் சம்பளம் அறிவித்த CEO ராஜினாமா.. காரணத்தை கேட்ட அசந்துருவீங்க!