லே லடாக்கின் இயற்கை அழகை ஐஆர்சிடிசியுடன் இணைந்து பாதுகாப்பாக ரசியுங்கள்

புதுடெல்லி: லே லடாக்கின் இயற்கை அழகைப் பார்க்க விருப்பம் உண்டா? ஆனால் விமான கட்டணம், தங்கும் வசதிகள் என பல விஷயங்கள் உங்களை இயற்கையை ரசிக்க தடுக்கிறதா? லே லடாக்கின் இயற்கை அழகைக் காட்ட IRCTC மீண்டும் ஒரு டூர் பேக்கேஜை உருவாக்கியுள்ளது. இந்த சுற்றுப்பயணம் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து தொடங்கும். 7 பகல் மற்றும் 6 இரவுகள் கொண்ட இந்த டூர் பேக்கேஜின். கட்டணம் ஒரு நபருக்கு ரூ 41,500/-லிருந்து தொடங்குகிறது.

லே லடாக்கின் இயற்கை அழகைக் காட்ட ஐஆர்சிடிசி மீண்டும் ஒரு டூர் பேக்கேஜை உருவாக்கியுள்ளது. இந்தப் பயணம் அடுத்த மாதம் செப்டம்பரில் தொடங்குகிறது. இந்த சுற்றுப் பயணம் தொடர்பாக,. IRCTC முழு விவரங்களை வெளியிட்டுள்ளது.

பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு, ஐஆர்சிடிசி அதாவது இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் ஒரு சிறந்த டூர் பேக்கேஜ் திட்டத்தை (IRCTC புதிய டூர் பேக்கேஜ்) உருவாக்ககியுள்ளது. இந்த சிக்கனமான விலை மலிவான டூர் பேக்கேஜில் பல சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த முறை ஐஆர்சிடிசி ஏர் டூர் பேக்கேஜ்கள் ஐஆர்சிடிசியால் டிஸ்கவர் லே லடாக் சுற்றுப்பயணத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணம் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து 7 பகல் மற்றும் 6 இரவுகள் தொடங்கும். சுற்றுலாப் பயணிகள் கொல்கத்தாவில் இருந்து கிளம்பி, மீண்டும் ஒரு வாரத்திற்கு பிறகு கொல்கத்தாவில் வந்து சேர்வார்கள்.

ஒரு நபருக்கு ரூ. 41,500/-லிருந்து தொடங்கும் கட்டணத்தில், நீங்கள் வாடகை இடங்களை தேர்வு செய்துக் கொள்ளலாம். இந்த சுற்றுப்பயணத்தில், லே, ஷயாம் பள்ளத்தாக்கு, நுப்ரா, பாங்காங் மற்றும் டார்டக் ஆகியவற்றின் இயற்கை அழகைக் கண்டு ரசிக்கலாம்.

IRCTC, இந்த சுற்றுப்பயணத்தை செப்டம்பர் 11, செப்டம்பர் 17 மற்றும் செப்டம்பர் 23 ஆகிய தேதிகளில் இயக்குகிறது.  இதற்காக கொல்கத்தாவில் இருந்து விமானம் புறப்படும். இந்த IRCTC சிறப்பு டூர் பேக்கேஜின் கட்டணத்தில் காலை உணவு, சுற்றிப் பார்ப்பது, இரவு உணவு ஆகியவை அடங்கும்.

மேலும் படிக்க | Old Pension Scheme: மத்திய அரசு அளித்த விளக்கத்தால் ஊழியர்களுக்கு அதிர்ச்சி 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.