வறட்டு இருமல் வந்துவிட்டால் தொண்டையில் எரிச்சலை உண்டாக்கும் தொடர்ந்து இருமல் வந்து கொண்டே இருக்கும்.
இந்த வறட்டு இருமல் பிரச்சனை பொதுவாக சளி இருப்பதினால் ஏற்படுவது இல்லை வைரஸ் அல்லது இதர தொற்றுநோய்களின் காரணமாக ஏற்படுகிறது.
இதனை எளியமுறையில் கூட நீக்க முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.
- ஒரு துண்டு இஞ்சியை வாயில் நாள் முழுவதும் போட்டு மெல்லுங்கள். இதனால் வறட்டு இருமல் குணமாக இஞ்சி பெரிதும் உதவுகிறது.
மேலும் செரிமான பிரச்னையும் சரியாகி, உடலின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது.
- தினமும் பலமுறை இரண்டு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடனே இந்த வறட்டு இருமல் குணமாகும்.
- தேனை 5 டேபிள் ஸ்பூன் எடுத்து கொண்டு அதனுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் கலந்து, அடுப்பில் வைத்து சூடேற்றி, பின்பு அதனை ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் இந்த வறட்டு இருமல் பிரச்சனை உடனே சரியாகும்.
- கற்றாழை ஜெல் ஜூஸில் தேன் கலந்து ஒருவர் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால், வறட்டு இருமல் குணமாகும், மேலும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கும்.
- வெங்காயம் நோய்தொற்றுகளில் இருந்து எதிர்த்து போராடி, உடலுக்கு நல்ல பாதுகாப்பு அளிக்கின்றது.
எனவே 1/2 ஸ்பூன் வெங்காய சாற்றுடன் 2 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து தினமும் இரண்டு முறை அருந்தி வந்தால் தொல்லைதரும், வறட்டு இருமல் குணமாகும்.
- ஒரு அகலமான பாத்திரத்தில் நன்கு கொதிக்க வைத்த வெந்நீரை நிரப்பி, அதில் சில துளிகள் யூகலிப்டஸ் ஆயில் சேர்த்து கலந்து, 15 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும்.
இப்படி சில நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், வறட்டு இருமல் குணமாகும்.
- தினமும் மசாலா டீ அருந்தி வரலாம், மசாலா டீயை தினமும் அருந்தி வருவதினால் அவற்றில் இருக்கும் மருத்துவப்பொருட்களான இஞ்சி, பட்டை, கிராம்பு போன்ற பொருட்கள் தொண்டையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் உடனே சரி செய்து விடும்.