கொச்சி:தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரிய தங்க கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேசின் மனுவை கேரள உயர் நீதிமன்றம் இன்று (ஆக.19) தள்ளுபடி செய்தது.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ், திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு போலீசார் தன் மீது தொடர்ந்துள்ள வழக்குகளை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘வழக்கு விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது. இந்த வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின், மனுதாரர் நீதிமன்றத்தில் முறையிடலாம்’ எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
‘மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர், முன்னாள் அமைச்சர் ஜலீல், முன்னாள் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன், முதல்வரின் தலைமைச் செயலராக பணியாற்றி ஓய்வு பெற்ற சிவசங்கர் ஆகியோருக்கு தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்பு உள்ளது’ என ஸ்வப்னா சுரேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement