சியோல்: தென்கொரியாவில் காதலியின் ஹேண்ட் பேக்கில் காதலன் சிறுநீர் கழித்ததை டிஎன்ஏ சோதனை மூலம் உறுதி செய்த நீதிமன்றம் ரூ.91 ஆயிரம் நஷ்டஈடு வழங்க அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
தென் கொரியாவின் சியோல் நகரில் வசித்து வருபவர் 31 வயது இளைஞர். இவர் இளம்பெண் ஒருவரை காதலித்தார். இருவரும் பல இடங்களுக்கு சென்று காதலை வளர்த்து வந்தனர்.
இந்நிலையில் தான் அந்த இளைஞர் கங்கனம்-கு பகுதியில் உள்ள காதலியின் வீட்டுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்றார். இருவரும் வீட்டில் பேசி கொண்டிருந்தனர்.

பேக்கில் சிறுநீர் கழித்த காதலன்
இந்த வேளையில் திடீரென்று இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் உருவாகி பிரச்சனை வெடித்தது. இதில் கோபம் அடைந்த காதலன் வீட்டில் இருந்து காதலியின் விலை உயர்ந்த லூயிஸ் உய்ட்டன் (louis vuitton) ஹேண்ட் பேக்கில் சிறுநீர் கழித்து கோபத்தை வெளிக்காட்டினர்.

நஷ்டஈடு கேட்டு வழக்கு
இதனால் கோபமடைந்த காதலி அவரை திட்டினார். மேலும் இருவருக்கும் இடையேயான காதல் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் தான் சம்பவம் தொடர்பாக அந்த பெண் சியோல் சென்ட்ரல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதாவது, ‛‛ரூ.1.50 லட்சம் மதிப்பிலான லூயிஸ் உய்ட்டன் பேக்கில் சிறுநீர் கழித்த முன்னாள் காதலனிடம் இருந்து நஷ்ட ஈடு பெற்று கொடுக்க வேண்டும்” என வழக்கு தொடர்ந்தார்.

உறுதி செய்த நீதிமன்றம்
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையின் போது பேக்கில்சிறுநீர் கழிக்கவில்லை என்றும் காதலியை கோபப்படுத்தும் நோக்கில் தான் இப்படி நடித்ததாகவும் அவரது முன்னாள் காதலன் கூறினார். இருப்பினும் சிறுநீர் கழித்ததாக கூறப்படும் பேக் மற்றும் அதில் இருந்த பொருட்களை தேசிய தடய அறிவியல் பிரிவினர் சோதனை செய்ததில் காதலன், பெண்ணின் ஹேண்ட் பேக்கில் சிறுநீர் கழித்தது உறுதியானது.

ரூ.91 ஆயிரம் அபராதம்
இதுமட்டுமின்றி டிஎன்ஏ சோதனையும் அவர் சிறுநீர் கழித்ததை உறுதி செய்தது. இதனையடுத்து அந்த காதலன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதோடு, அபராதமாக 1,150 அமெரிக்க டாலர் (இந்திய ரூபாயில் 91,634) நஷ்டஈடாக வழங்க நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறபித்துள்ளது.