7 வயது சிறுவன் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் ஒன்று மிதந்து செல்வதாக அங்குள்ளவர்கள் காவல்துறையினருக்கு இதுகுறித்து தகவல் அளித்தனர். இதனை அடுத்து, தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து வாய்காலில் தண்ணீரில் இறங்கி 45 மதிக்க தக்க ஆண் உடலை தேடி கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு 7 வயது சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனை அடுத்து, அவரின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் சிறுவன் யார் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.