ஆன்லைன் பர்னிச்சர் சில்லறை விற்பனையாளரான வேஃபேர் இன்க் அதன் சர்வதேச அளவிலான ஊழியர் தொகுப்பில் 5% அல்லது 870 பேரை பணி நீக்கம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது அதன் செயல்பாட்டு செலவினங்களை குறைக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
செலவினங்களை குறைப்பதோடு, முதலீட்டுக்கு முன்னுரிமை கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
பார்லே ஜி, மொனாகோ, கிராக் ஜாக் பிஸ்கட் விலை குறையுமாம்.. ஏன் தெரியுமா?

செலவு குறையும்
இந்த நிறுவன பங்கின் விலையானது ப்ரீ மார்கெட் செசனிலேயே 8% சரிந்திருந்தது. இந்த நிறுவனத்தின் செலவுகள் 30 – 40 மில்லியன் டாலருக்குள் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆக ஊழியர்களின் எண்ணிக்கை குறைப்பானது மேற்கொண்டு நிறுவனத்திற்கு பெரியளவிலான செலவுகள் குறைக்க வழிவகுக்கலாம். இது வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும்.

இழப்புக்கு என்ன காரணம்
இந்த மாத தொடக்கத்தில் நிறுவனம் எதிர்பார்த்ததை விட பெரிய இழப்பினை கண்டது. சப்ளை சங்கிலியில் ஏற்பட்ட செலவுகள், தொற்று நோயால் ஏற்பட்ட பிரச்சனை, லாகிஸ்டிக்ஸ் செலவுகள் என பலவும் பெரியளவில் அதிகரித்திருந்தன. இதற்கிடையில் மூன்றாவது காலாண்டிலும் கணிசமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வேஃபேர் இந்தியாவிலும் கணிசமான ஊழியர்களும் உள்ள நிலையில் அவர்களும் இதில் பாதிக்கப்படலாம் என தெரிகிறது.

சர்வதேச நிறுவனங்கள்
இந்த இக்கட்டான காலகட்டத்தில் மிகப்பெரிய டெக் ஜாம்பவான்கள் கூட பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளன. பல நிறுவனங்களும் புதிய பணியமர்த்தலை சுருக்கி வருகின்றன.
குறிப்பாக இந்தியாவில் பல்வேறு ஸ்டார்ட் அப்களும் பணி நீக்கம் செய்யத் தொடங்கியுள்ளன. இந்த போக்கானது இன்னும் சிறிது காலத்திற்கு தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணி நீக்கம் அதிகரிக்கலாம்
சர்வதேச அளவில் நிலவி வரும் பணவீக்கத்தின் மத்தியில், பல்வேறு நாடுகளிலும் மேற்கோண்டு வேலையிழப்பினை அதிகரிக்கலாம். பணி நீக்கத்தினை தூண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு பல ஆயிரம் பேரை வறுமை நிலைக்கு தள்ளகூடும் என சமீபத்திய ஆய்வறிக்கை கூறியது நினைவுகூறத்தக்கது.
Wayfair plans to cut 870 jobs amid cost cutting
Wayfair plans to cut 870 jobs amid cost cutting/870 பேர் பணி நீக்கம் செய்யப்படலாம்.. கவலையில் வேஃபேர் ஊழியர்கள்..!