Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Latest Updates
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்த நாளான கிருஷ்ண ஜெயந்தி, ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாக கருதப்படும் கிருஷ்ணரின் பிறப்பைக் குறிக்கிறது. அந்தவகையில் இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி, ஆகஸ்ட் 19 அன்று உலகம் முழுவதும் உள்ள இந்து மக்களால் கோலகலமாக கொண்டாடப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணி வெற்றி
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 40.3 ஓவர்கள் முடிவில் 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி 30.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்திய அணியில் ஷிகர் தவான் – 81, சுப்மன் கில் – 82 ரன்களை எடுத்தனர்.
நெல்லை கண்ணன் மறைவு
தமிழகத்தின் பிரபல இலக்கிய பேச்சாளரும், பட்டிமன்ற நடுவரும் ஆன நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவு காரணமாக வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 78. திருநெல்வேலி பூர்விகமாகக் கொண்ட நெல்லை கண்ணன், காமராசர், கண்ணதாசன் என தமிழகத்தின் முக்கிய ஆளுமைகளுடன் நெருங்கிப் பழகியவர்.
அவரது உடலுக்கு அரசு சார்பில், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ராஜகண்ணப்பன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். நெல்லை டவுனில் உள்ள இல்லத்திற்கு நேரில் சென்ற அமைச்சர்கள், நெல்லை கண்ணன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
கர்நாடகாவின் ராம்நகர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம், நித்யானந்தாவுக்கு மீண்டும் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
நெல்லை கண்ணன் உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அஞ்சலி
அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அபாரத நடவடிக்கை . கூடுதல் கட்டண புகாரில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். தொடர் விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டண வசூலை தடுக்க நடவடிக்கை – அமைச்சர் சிவசங்கர்
வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் – துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் .சென்னை, கடலூர், நாகை, பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் .
தமிழகத்தில் இன்று டெல்டா மற்றும் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் * கடலூர், தேனி, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. துரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் சுற்றுப்பயணம் வரும் 24 முதல் 26ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் பங்கேற்கிறார் முடிவுற்ற திட்ட பணிகளை துவக்கி வைத்து, நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்
சீன கப்பல் இலங்கைக்கு வந்துள்ளது இந்தியாவை உளவு பார்க்க தான். சீன கப்பல் விவகாரத்தில் இலங்கையை இந்தியா ஏன் கண்டிக்கவில்லை?. கடந்த காலங்களில் இலவசங்கள் குறித்து பாஜக ஏன் பேசவில்லை- நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
மின்சாரம் வாங்க, விற்க தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, பீகார் உள்பட 13 மாநிலங்களுக்கு தடை 13 மாநிலங்களும் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.5,000 கோடி நிலுவை பாக்கி நிலுவை தொகையை செலுத்த தவறியதால் மத்திய அரசு நடவடிக்கை
மின்சார கொள்முதல் தடையால் தற்காலிகமாக எந்த பாதிப்பும் ஏற்படாது நிலுவை தொகை விரைவில் முழுமையாக செலுத்தப்படும் – தமிழக மின்வாரிய அதிகாரிகள் தகவல் .
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.38,576-க்கு விற்பனை ஒரு கிராம் தங்கம் ரூ.4,822க்கு விற்பனை
இபிஎஸ் வராமல் போனால் போகட்டும் . தொண்டர்கள் ஓபிஎஸ்-ஸை தேடி வருகிறார்கள் – ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆவணி திருவிழா தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
அவரது மூவாத மேடைத் தமிழ் மூத்த செவிகளில் ஒலித்தபடியே இருக்கும். தமிழய்யாவுக்கு என் அஞ்சலி
சிந்தித்தால் தமிழ், வாய் திறந்தால் பழம்பாடல், சொல்வதெல்லாம் மேற்கோள்கள் என, தமிழே உயிராக வாழ்ந்த தமிழ்க் கடல் நெல்லை கண்ணன் மறைந்துவிட்டார். அவரது மூவாத மேடைத் தமிழ் மூத்த செவிகளில் ஒலித்தபடியே இருக்கும். தமிழய்யாவுக்கு என் அஞ்சலி.
— Kamal Haasan (@ikamalhaasan) August 19, 2022
நீட் தேர்வில் விலக்கு தொடர்பாக உள்துறை அமைச்சகம் சில விவரங்களை தமிழ்நாடு அரசிடம் கேட்டுள்ளது; அதன் பின் குடியரசு தலைவர் நீட் விலக்கிற்கு ஒப்புதல் அளிப்பார் என நம்புகிறோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
புதிய மதுக்கொள்கை முறைகேடு புகாரில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீடு உள்ளிட்ட 21 இடங்களில் சிபிஐ சோதனை நட த்தி வருகிறது.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, வியாழன் இரவு சென்னை கோபாலபுரம் வேணு கோபாலசுவாமி கோயிலில், தமிழிசை சவுந்திரராஜன் தரிசனம் செய்தார். பிறகு கருணாநிதியின் இல்லத்திற்கு சென்ற அவர் தயாளு அம்மாளை சந்தித்துவிட்டு, புறப்பட்டுச் சென்றார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில், 4 மாவட்ட செயலாளர்களின் முன் ஜாமின் மனுக்களில், காவல்துறை பதிலளிக்கும் வரை கைது செய்யக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வங்கி கொள்ளை வழக்கில் 3.5 கிலோ தங்க நகைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த வழக்கில், அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜை சஸ்பெண்டு செய்து காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்தியபிரியா உத்தரவிட்டார்.