இந்திய விமானப்படையின் சுகோய் Su-30MKI போர் விமானங்களுக்கு பிரான்ஸ் நாட்டு விமானம் நடுவானில் எரிபொருள் நிரப்பியது.
வளர்ந்து வரும் இந்தியா- பிரான்ஸ் உறவுகளின் ஒரு பகுதியாக, பிரான்ஸ் ராணுவத்தின் டேங்கர் விமானம், இந்திய விமானப்படை போர் விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்பியது. பிட்ச் பிளாக் 2022 என்ற இராணுவப் பயிற்சியில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா நோக்கி சென்ற போது எரிபொருள் நிரப்பியது.
இதற்காக பிரான்ஸ் நாட்டு விமானப்படைக்கு இந்திய விமானப்படை நன்றி தெரிவித்துள்ளது.