இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற பிரித்தானிய இளம்பெண்… குழந்தைகள் வெவ்வேறு நிறத்தில் இருந்ததால் அதிர்ச்சி


பிரித்தானிய இளம்பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

ஆனால், அவற்றில் ஒன்று வெள்ளையினக் குழந்தையாகவும் மற்றொன்று கருப்பினக் குழந்தையாகவும் உள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
 

பிரித்தானிய இளம்பெண் ஒருவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், அவை வெவ்வேறு நிறத்தில் இருப்பதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

பிரித்தானியாவிலுள்ள Nottinghamஐச் சேர்ந்த Chantelle Broughton(29), பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. ஆனால், அவரிடம் குழந்தைகளை செவிலியர்கள் கொடுத்தபோது தன் குழந்தைகளைக் கண்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார் அவர்.

காரணம், அவருடைய குழந்தைகளில் ஒன்று வெள்ளை நிறத்தில் பச்சை நிறக் கண்களுடனும், மற்றொரு குழந்தை மாநிறத்தில் பழுப்பு நிறக் கண்களுடனும் இருந்துள்ளது.

இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற பிரித்தானிய இளம்பெண்... குழந்தைகள் வெவ்வேறு நிறத்தில் இருந்ததால் அதிர்ச்சி | British Teenager Gives Birth To Twins

CREDIT: SWNS

தன் குழந்தைகளில் ஆண் குழந்தைக்கு Ayon என்றும், பெண் குழந்தைக்கு Azirah என்றும் பெயரிட்டுள்ளார் Chantelle.
 

இதற்கிடையில், குழந்தைகளைப் பார்ப்பவர்கள், Chantelleஇடம், இவை இரண்டும் உங்கள் குழந்தைகள்தானா என்று கேட்கிறார்களாம்.

இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற பிரித்தானிய இளம்பெண்... குழந்தைகள் வெவ்வேறு நிறத்தில் இருந்ததால் அதிர்ச்சி | British Teenager Gives Birth To Twins


Image: Chantelle Broughton / BPM Media

விடயம் என்னவென்றால், Chantelleஇன் தாய்வழி தாத்தா ஒரு நைஜீரியர். அத்துடன் Chantelleஇன் கணவரான Ashton (29)உடைய பெற்றோரில் ஒருவர் ஜமைக்கா நாட்டவர் மற்றவர் ஸ்காட்லாந்து நாட்டவர்.

வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த பெற்றோருக்கு இப்படி வெவ்வேறு நிறங்களில் குழந்தை பிறப்பது ஒரு மில்லியனில் ஒருவருக்குத்தான் நடக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
 

இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற பிரித்தானிய இளம்பெண்... குழந்தைகள் வெவ்வேறு நிறத்தில் இருந்ததால் அதிர்ச்சி | British Teenager Gives Birth To Twins

Image: Chantelle Broughton / BPM Media



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.