- மனித உடல் உறுப்பு எச்சங்களை விற்பனை செய்ய முயன்ற பெனிசில்வேனியா நபர் ஜெர்மி லீ பாலி கைது.
பாலின் வீட்டில் இருந்து மூன்று ஐந்து-கேலன் வாளிகள் அடங்கிய மனித உடல் உறுப்பு அடங்கிய பொதி கைப்பற்றப்பட்டது.
திருடப்பட்ட மனித எச்சங்களை பேஸ்புக்கில் விற்க முயன்ற பென்சில்வேனியாவின் ஜெர்மி லீ பாலியை(40) பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பென்சில்வேனியாவின் ஈனோலாவைச் சேர்ந்த 40 வயதான ஜெர்மி லீ பாலி ஃபேஸ்புக்கில் மறுவிற்பனை செய்வதற்காக திருடப்பட்ட மனித எச்சங்களை வாங்க முயன்றதாக பொலிஸார் தெரிவித்ததை அடுத்து, அவர் மீது பிணத்தை துஷ்பிரயோகம் செய்தது மற்றும் திருடப்பட்ட சொத்துக்களைப் பெற்றது போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
AP
லிட்டில் ராக்கில் உள்ள மருத்துவ அறிவியலுக்கான ஆர்கன்சாஸ் பல்கலைகழகத்தின் மார்ச்சரி சர்வீசஸ்ஸில் இருந்து நன்கொடையாக வழங்கப்பட பெண்ணின் உடல் சவக்கிடங்கு ஊழியர்களால் திருடப்பட்டு விற்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
40 வயதுடைய ஜெர்மி லீ பாலி இவ்வாறு திருடப்பட்ட உடல் உறுப்புகளை சந்தைப்படுத்த “The Grand Wunderkammer” என்ற பேஸ்புக் பக்கத்தைப் பயன்படுத்தி வந்துள்ளார்.
மேலும் திருடப்பட்ட மனித எச்சங்களை வாங்கியதற்காக அவர் கைது செய்யப்பட்டதுடன், அவரது வீட்டில் நடைபெற்ற சோதனையில் குழந்தையின் உடல் பாகங்கள் உட்பட மூன்று ஐந்து-கேலன் வாளிகள் அடங்கிய மனித உடல் உறுப்பு அடங்கிய பொதிகளை மத்திய மற்றும் மாநில சட்ட அமலாக்க முகவர்கள் தடுத்து நிறுத்தினர்.
ஜெர்மி லீ பாலியின் வாக்குமூலத்தின்படி, உடல் உறுப்புகளை மறுவிற்பனை செய்ய எண்ணியதாக பாலி விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் ஃபேஸ்புக் மெசஞ்சர் மூலம் ஆர்கன்சாஸ் மார்ச்சரி சர்வீசஸ்ஸில் இருந்து திருடப்பட்ட பெண்ணுக்கு உடல் உறுப்புகளுக்கு $4,000 கொடுக்க பாலின் ஏற்பாடு செய்ததாக புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கூடுதல் செய்திகளுக்கு: G20 உச்சிமாநாடு…ரஷ்யாவிற்கு தார்மீக உரிமை இல்லை: பிரித்தானியா அறிவிப்பு
இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வியாழன்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட பாலின், நீதிமன்ற பதிவுகளின்படி பவுலி $50,000 பத்திரத்தில் விடுவிக்கப்பட்டார்.