உக்ரைன் போரால் ரஷ்யாவுக்கு என்ன லாபம்..? 12.4 டிரில்லியன் டாலர்..!

கொரோனா தொற்றுக்குப் பின்பு உலக நாடுகளைப் புரட்டிப் போட்ட முக்கியமான விஷயம் என்றால் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடுத்த போரும் அதன் பின்பு உலக நாடுகள் அடுத்தடுத்து போட்ட தடை உத்தரவு மூலம் ரஷ்யா-வின் பொருளாதாரம் மட்டும் அல்லாமல் உலக நாடுகளின் பொருளாதாரமும் ஆட்டம் கண்டது என்றால் மிகையில்லை.

இந்த நிலையில் அமெரிக்கப் பத்திரிக்கை முக்கியமான ஆய்வை முடிவுகளை வெளியிட்டு உள்ளது, இதில் உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா கைப்பற்றிய சொத்துக்களின் மதிப்பை வெளியிட்டு உள்ளது.

கமிஷன் போர்-ஐ துவங்கிய ஜியோ.. முகேஷ் அம்பானி திட்டம் என்ன..?

உக்ரைன் - ரஷ்யா போர்

உக்ரைன் – ரஷ்யா போர்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நாளில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதிகளாக ரஷ்யா கைப்பற்றி வருகிறது. இந்த நிலையில் ரஷ்யா இப்போது குறைந்தபட்சம் $12.4 டிரில்லியன் மதிப்புள்ள உக்ரைனின் முக்கிய இயற்கை வளங்களான ஆற்றல் மற்றும் கனிம வைப்புகளைக் கட்டுப்படுத்தி வருவதாக SecDev ஆய்வுகள் கூறுகிறது.

கனிம வள பகுதிகள்

கனிம வள பகுதிகள்

ரஷ்யாவின் படையெடுப்பின் போது கைப்பற்றப்பட்ட உக்ரேனிய நிலத்தை ரஷ்யா உடன் இணைக்கப்பட்டால், உக்ரைன் நாட்டின் 3ல் 2 பங்கு கனிம வள பகுதிகளை ரஷ்யா வசம் வந்துவிடும். இது உக்ரைன் நாட்டின் பொருளாதாரத்தை மொத்தமாக ஆட்டிவிடும் என்றால் மிகையில்லை. இதில் சிலவற்றை 2014 கிரிமியா போரின் போது கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் வளங்கள்
 

உக்ரைன் வளங்கள்

SecDev அமைப்பு சுமார் 2,209 கனிமவள பகுதிகளை ஆய்வு செய்தது. இதில் ரஷ்யா உக்ரைன் நாட்டின் நிலக்கரியில் 63%, அதன் எண்ணெய் வளத்தில் 11%, இயற்கை எரிவாயு வளத்தில் 20%, உலோக கனிம வளத்தில் 42% மற்றும் லித்தியம் போன்ற முக்கியத் தாதுக்கள் உட்பட அதன் அரிய பூமி வளங்களில் 33% ஆகியவற்றைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.

வளங்கள்

வளங்கள்

SecDev மற்றும் உக்ரேனிய தொழில்துறை தரவுகள் படி எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்க்கையில் ரஷ்யா, உக்ரைன் நாட்டின் 41 நிலக்கரி வயல்கள், 27 இயற்கை எரிவாயு தளங்கள், 14 புரொப்பேன் தளங்கள், ஒன்பது எண்ணெய் வயல்கள், ஆறு இரும்பு தாது வைப்புக்கள், அத்துடன் டைட்டானியம், சிர்கோனியம், ஸ்ட்ரோண்டியம், லித்தியம், யுரேனியம் மற்றும் தங்கம் போன்ற பல தளங்களைக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

எண்ணெய் வளங்கள்

எண்ணெய் வளங்கள்

உக்ரைன் இன்னும் அதன் பெரும்பாலான எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், ரஷ்யா கட்டுப்பாட்டின் கீழ் அதன் இயற்கை வளத்தின் பெரும்பகுதி சென்றுள்ளது.

12 டிரில்லியன் டாலர்

12 டிரில்லியன் டாலர்

இதில் முக்கியமாக 11.9 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள சுமார் 30 பில்லியன் டன்கள் கடின நிலக்கரி வளங்கள் ரஷ்ய கட்டுப்பாட்டிற்குள் சென்றுள்ளது.

Ola: ரூ.600-க்கு ஆசைப்பட்டு 1 லட்சம் அபராதம்.. ஹைதராபாத் நீதிமன்ற உத்தரவு..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Russia took over $12.4 trillion worth of Ukraine’s energy, metal and mineral deposits

Russia took over $12.4 trillion worth of Ukraine’s energy, metal and mineral deposits உக்ரைன் போரால் ரஷ்யாவுக்கு என்ன லாபம்..? 12.4 டிரில்லியன் டாலர்..!

Story first published: Saturday, August 20, 2022, 19:54 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.