திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மனைவியுடன் தொடர்பில் இருந்த நபரை அறிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற இளைஞர் குறித்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Recommended Video
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அழகாபுரி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி அருள்மொழி.
அருள்மொழிக்கும் ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் எலக்ட்ரானிக் வீட்டு உபயோகப் பொருட்கள் கடையில் பணியாற்றும் ஊழியரான அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்ற இளைஞருக்கும் இடையே செல்போன் வாங்கியது தொடர்பாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.

முறையற்ற உறவு
கடந்த சில மாதங்களாக இவர்கள் இடையே திருமணத்தை மீறிய கள்ள தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த சதீஷ் தனது மனைவியான அருள்மொழியும் அவருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் அரவிந்த் ஆகியோரை ஏற்கனவே இரண்டு முறை எச்சரித்ததாக கூறப்படுகிறது.

செல்போனில் பேச்சு
இந்த நிலையில் சதீஷின் எச்சரிக்கை மீறி தொடர்ந்து இருவரும் செல்போனில் உரையாடிக் கொண்டிருந்ததாகவும் இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் இன்று மாலை ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் உள்ள தனியார் எலக்ட்ரானிக் கடையில் பணியில் இருந்த அரவிந்தை சாலையில் சென்று கொண்டிருந்த சிறுவன் ஒருவனை கடைக்கு உள்ள அனுப்பி அவரை வெளியே அழைக்குமாறு கூறியுள்ளார்.

கொலை முயற்சி
இதனைத் தொடர்ந்து கடையிலிருந்து வெளியே வந்த அரவிந்திடம் சதீஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் வாக்குவாதம் கைகலப்பாக மாறி சதீஷ் தான் மறைத்து வைத்திருந்த அறிவாளால் அரவிந்தை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அரவிந்தை மீட்ட கடை ஊழியர்கள் அவரை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சிசிடிவி காட்சிகள்
இந்நிலையில் அங்கிருந்து அரவிந்த் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஆம்பூர் நகர காவல் துறையினர் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ள காட்சிகள் அடிப்படையில் கடை ஊழியரை வெட்டிவிட்டு தப்பிச் சென்ற சதீஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.