ஐரோப்பிய நாடுகளின் புதிய யோசனை…நாஜி கொள்கைக்கு சமமானது: ரஷ்யா குற்றச்சாட்டு


ரஷ்ய மக்களை அனுமதிக்க மறுப்பது நாஜி கொள்கைக்கு சமமானது.


சர்வதேச சமூகத்தின் அடிப்படைக் கொள்கைகளை பாலிடிக் நாடுகள் புறக்கணிக்கின்றனர்.

ரஷ்ய குடிமக்கள் அனைவரும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழைவதை தடை செய்யும் யோசனையை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு நாஜி கொள்கையுடன் ஒப்பிட்டார்.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் முடிவில்லாத போக்கில் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் இந்த போக்கை கண்டிக்கும் விதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் ரஷ்ய குடிமக்கள் நுழைவதை தடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

ஐரோப்பிய நாடுகளின் புதிய யோசனை...நாஜி கொள்கைக்கு சமமானது: ரஷ்யா குற்றச்சாட்டு | Banning Russians From Eu Act Nazism Sergey ShoiguSputnik via AP.

இதற்கு முன்னதாகவே லாட்வியா, பின்லாந்து மற்றும் எஸ்டோனியா ஆகிய நாடுகள் ரஷ்ய குடிமக்களை தங்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடைசெய்வதாக அறிவித்தன, மேலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளையும் பின்பற்றுமாறு வலியுறுத்தின.

இந்தநிலையில் சனிக்கிழமையன்று நடந்த முதல் சர்வதேச பாசிச எதிர்ப்பு காங்கிரஸ் கூட்டத்தின் போது பேசிய ரஷ்ய பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்கு, ரஷ்ய குடிமக்கள் அனைவரும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழைவதை தடை செய்யும் யோசனையை நாஜி கொள்கையுடன் ஒப்பிட்டார்.

இதுத் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்தில், அனைத்து ரஷ்ய குடிமக்களும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழைவதைத் தடைசெய்யும் ருஸ்ஸோபோபிக்(Russophobic) யோசனை தீவிரமாக ஊக்குவிக்கப்படும்போது நாஜிக் கொள்கையின் மற்றொரு தெளிவான வெளிப்பாடாக நாம் இதைப் பார்க்கலாம் என செர்ஜி ஷோய்கு(Sergey Shoigu) தெரிவித்தார்.

ஐரோப்பிய நாடுகளின் புதிய யோசனை...நாஜி கொள்கைக்கு சமமானது: ரஷ்யா குற்றச்சாட்டு | Banning Russians From Eu Act Nazism Sergey ShoiguEPA

கூடுதல் செய்திகளுக்கு: நேட்டோ ஒப்பந்தத்தை பின்லாந்து, ஸ்வீடன் நாடுகள் செயல்படுத்தவில்லை: துருக்கி குற்றச்சாட்டு

மேலும் சர்வதேச சமூகத்தின் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் நியூரம்பெர்க் தீர்ப்பாயத்தின் அரசியல் கண்டுபிடிப்புகள் தனிப்பட்ட நாடுகளால், அவற்றிலும் குறிப்பாக பால்டிக் நாடுகளால் புறக்கணிக்கப்பட்டு திருத்தப்படுகின்றன என குற்றம்சாட்டினார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.