ரிலையன்ஸ் ஜியோ அதன் சேவைகளைத் தொடங்கி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மற்றும் அதன் ப்ரீமியம் ஜியோ ஃபைபர் சேவைகளை அறிமுகப்படுத்திய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ரிலையன்ஸ் ஜியோ அதன் டீலர்கள் மற்றும் விற்பனை பிரிவுக்குப் பணப் பெட்டியை திறந்துள்ளது.
கடந்த ஓராண்டில் ரிலையன்ஸ் ஜியோ டீலர் கமிஷன் பில் மட்டும் சுமார் 87 சதவீதம் உயர்ந்துள்ளது, இந்த வேகம் அடுத்த ஆண்டிலும் தொடரும் என ஜெஃப்ரிஸ் அறிக்கை கூறுகிறது.
இந்தத் திடீர் உயர்வுக்கு முக்கியக் காரணம் பிராட்பேண்ட் சேவையில் இருக்கும் போட்டி தான். அதையும் தாண்டி முகேஷ் அம்பானி முக்கியமான திட்டத்தைத் தீட்டியுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
டிசிஎஸ்-ன் முக்கிய அறிவிப்பு.. அழாத குறையில் ஊழியர்கள்.. என்ன நடந்தது..?!

ரிலையன்ஸ் ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ தனது ஹோம்-பிராட்பேண்ட் சேவையைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்து நாடு முழுவதும் வாடிக்கையாளர்களைப் பெற வேண்டும் என்பதற்காக ஜியோவின் விற்பனையில் 3.4 சதவீதத்தை டீலர் கமிஷன் ஆக அளித்து அதன் சக போட்டி நிறுவனங்களுக்கு இணையாக வளர்ச்சி அடைந்துள்ளது.

ரிலையன்ஸ் ரீடைல்
ரிலையன்ஸ் ஜியோ-வின் மிகப்பெரிய டீலர் என்றால் அது ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் தான். இந்தியா முழுவதும் சுமார் 12,000 க்கும் மேற்பட்ட கடைகளைக் கொண்டுள்ளது. ரிலையன்ஸ் ரீடைல் கமிஷன்களில் மட்டும் 2022 ஆம் நிதியாண்டில் 2,580 கோடி ரூபாயை பெற்றுள்ளது.

சந்தாதாரர்களின் எண்ணிக்கை
FY22 இன் போது மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 34 சதவீதமாக உயர்ந்துள்ள போதிலும், ரிலையன்ஸ் ஜியோவின் ஒட்டுமொத்த விற்பனை மற்றும் விநியோக செலவுகள் 6 சதவீதம் குறைந்துள்ளது.

60 லட்சம் பேர்
ஜியோ ஃபைபர் 6 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது மற்றும் அதை 20 மில்லியனாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. புதிய 5G ஸ்பெக்ட்ரத்தை வாங்கிய பிறகு, ஜியோவின் கேபெக்ஸ் அதிகரிக்கத் தயாராகிவிட்டாலும்,பணப்புழக்கங்கள் பாதிக்கப்படும் போதும், இந்தக் கமிஷன்களின் அதிகரிப்பு ஜியோ கவனமாகக் கணக்கிடப்பட்டு உள்ளது.

கமிஷன் போர்
ரிலையன்ஸ் ஜியோவின் இந்தக் கமிஷன் போட்டி ஜியோ ஃபைபர் வாடிக்கையாளர்களைப் பெரிய அளவில் உருவாக்குவது மட்டும் அல்லாமல் டீலர் நெட்வொர்க் பெரிய அளவில் விரிவாக்கம் அடையும்.

வேகம்
இதேபோல் அதிகக் கமிஷன் அளிக்கப்படும் காரணத்தால் புதிய டீலர்களைச் சக டெலிகாம் நிறுவனத்தில் இருந்து ஈர்க்க முடியும். இது பெரும் தாக்கத்தைச் சந்தையில் உருவாக்குவது மட்டும் அல்லாமல் பிற நிறுவனங்கள் பல வருடத்தில் செய்ததை, ரிலையன்ஸ் ஜியோ சில வருடத்தில் செய்கிறது.

முகேஷ் அம்பானி திட்டம்
இந்த டீலர் நெர்வொர்க் கொண்டு ரிலையன்ஸ் ஜியோ இந்தியா முழுவதும் அடுத்தடுத்து அறிமுகம் செய்யத் திட்டமிட்டு உள்ள ஜியோ போன், ஜியோ 5ஜி போன் ஆகியவற்றின் விற்பனையை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய முடியும்.
மின்சார நிலுவை தொகை: ஓரே நாளில் 80% சரிவு.. தமிழ்நாட்டின் நிலை என்ன..?!
Reliance Jio dealer commissions bill went up by 87 percent
Reliance Jio dealer commissions bill went up by 87 percent கமிஷன் போர்-ஐ துவங்கிய ஜியோ.. முகேஷ் அம்பானி திட்டம் என்ன..?