கழுத்து வலியால் அவதியா? இதனை குறைக்க இந்த பயிற்சியை மறக்கமால் செய்து வாருங்க!


பொதுவாக சில குறிப்பிட்ட முத்திரைகள் கழுத்து இறுக்கத்தைப் போக்குவதன் மூலமும், கழுத்து, தோள் மற்றும் மேல் முதுகுத் தசைகளைப் பலப்படுதுவதன் மூலமும் கழுத்து வலியைப் போக்க உதவுகின்றன.

இதற்கு பிரம்ம முத்திரையையும் நீங்கள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் பிரயோக படுத்துவதே நல்லது.

மற்ற நேரத்திலும் பிரம்ம முத்திரையை பிடிக்கலாம்.

அதில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.

தற்போது இந்த பயிற்சினை எப்படி செய்யலாம் என்பதை இங்கே பார்ப்போம்.    

கழுத்து வலியால் அவதியா? இதனை குறைக்க இந்த பயிற்சியை மறக்கமால் செய்து வாருங்க! | Suffering From Neck Pain

செய்முறை

பதுமாசனம், சுகாசனம் அல்லது வஜ்ஜிராசனத்தில் அமரவும். இரண்டு உள்ளங்கைகளையும் தொடையின் மீது வைக்கவும்.

இரண்டு கைகளின் பெரு விரல்களையும் மடித்து, பெருவிரலின் நுனி சிறுவிரலின் அடியில் இருக்குமாறு வைக்கவும்.  

மீதமுள்ள நான்கு விரல்களையும் பெருவிரலின் மேல் வைத்து மூடவும்.

இப்பொழுது இரண்டு கைகளின் மடிக்கப்பட்ட விரல்களும் ஒன்றோடு ஒன்று சேருமாறு வைக்கவும்.

சற்றே அழுத்தம் கொடுக்கவும். 15 முதல் 20 நிமிடங்கள் வரை பிரம்ம முத்திரையில் இருக்கவும்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.