குடும்ப பிரச்சனை காரணமாக தந்தையை கொலை செய்த மகன்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ராஜ். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் கார்த்தி (40) லோடுமேன் ஆக பணிபுரிந்து வருகிறார். கார்த்திக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது. இதனால் கார்த்தியின் மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

அந்த நிலையில் இந்த வழக்கில் கார்த்தி கடந்த 10 வருடங்களாக சிறை தண்டனை பெற்று வந்துள்ளார். அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் கார்த்தி ஜாமினில் இருந்து வெளிவந்தார். மனைவி இறந்த துக்கத்திலிருந்து அவபோது குடும்பத்தார் இடையே மது போதையில் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று கார்த்தி மது போதையில் தந்தையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதைக்கிடையில் இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. இதில் அதிகம் கூபம் கொண்ட கார்த்தி அருகில் இருந்த கட்டையால் கொண்டு தனது தந்தையை கொடூரமாக அடித்து கொலை செய்துள்ளார். தந்தையை கொலை செய்து விட்டு அங்கிருந்து கார்த்தி தப்பி ஓடிவிட்டார். 

பின்னர் அக்கம் பக்கத்தினர் ராசிபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக ராசிபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளது, மேலும் இது குறித்து உரிய விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.