கொழும்பு மா நகர சபை எல்லைக்கு உட்பட்ட சில பகுதிகளில், இன்று (20) நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக , தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அத்தியவசிய மேம்படுத்தல் பணிகளுக்காக, இவ்வாறு நீர் விநியோகத் தடை மேற்கொள்ளப்படவுள்ளதாக, சபை குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய, கொழும்பு – 05 மற்றும் 06 ஆகிய பகுதிகளில், இன்று சனிக்கிழமை (20) இரவு 11 மணி முதல், ஞாயிற்றுக்கிழமை (21) காலை 9 மணி வரை, 10 மணித்தியால நீர் விநியோகத் தடை அமுலாக்கப்படவுள்ளது.
அத்துடன், கொழும்பு – 04 பகுதிக்கு, குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் எனவும் நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.