கௌதம் அதானி-யின் ரூ.7000 கோடி டீல்.. முதலீட்டாளர்களே உஷாரா இருங்க..!

கௌதம் அதானி தலைமை அதானி பவர் லிமிடெட் DB பவர் லிமிடெட் (DBPL) இன் தெர்மல் எனர்ஜி சொத்துக்களைத் தெய்னிக் பாஸ்கர் குழுமத்திடம் இருந்து சுமார் 7,017 கோடி ரூபாய்க்கு மதிப்பீட்டில் வாங்க ஒப்புக்கொண்டுள்ளது.

இந்தியா முழுவதும் மின்சாரம் முக்கியப் பிரச்சனையாக மாறியிருக்கும் நிலையில், தனியார் நிறுவனமான அதானி பவர் தனது மின்சார உற்பத்தி திறனை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

கௌதம் அதானி-யின் அடுத்த டார்கெட் இலங்கை.. 500 மில்லியன் டாலர் முதலீடு.. 2வது திட்டம் ஒப்புதல்..!

DB பவர்

DB பவர்

வெள்ளிக்கிழமை மாலை வெளியாகத் தகவல்கள் அடிப்படையில் DB பவர் நிறுவனத்தின் தெர்மல் எனர்ஜி சொத்துக்களைச் சுமார் 7,017 கோடி ரூபாய்க்கு மொத்தமாகப் பணமாகக் கொடுத்து வாங்க இரு தரப்பினரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் மூலம் சொத்துப் பரிமாற்றம் அக்டோபர் 31, 2022 முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

600 மெகாவாட்

600 மெகாவாட்

டிபி பவர் சத்தீஸ்கரின் ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தில் தலா 600 மெகாவாட் திறன் கொண்ட 2 தெர்மல் எனர்ஜி அமைப்புகளைக் கொண்டுள்ளது. தெய்னிக் பாஸ்கர் குழுமத்தின் பவர் பிசினஸ் ஒரு தனி ஹோல்டிங் நிறுவனத்தின் கீழ் வருகிறது.

 டிலிஜென்ட் பவர்
 

டிலிஜென்ட் பவர்

இதன் அடிப்படையில் டிபி பவர் நிறுவனத்தில் டிலிஜென்ட் பவர் பிரைவேட் லிமிடெட் (டிபிபிஎல்) நிறுவனத்தில் 83.87% பங்குகளை வைத்து உள்ளது. இதேபோல் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான குளோபல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பார்ட்னர்ஸ் (ஜிஐபி) 16.13 சதவீத பங்குகளை வைத்துள்ளது.

டிலிஜென்ட் பவர் முதலீட்டாளர்கள்

டிலிஜென்ட் பவர் முதலீட்டாளர்கள்

டிலிஜென்ட் பவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ப்ரோமோட்டர்கள், லார்பர்க் பின்கஸ், TRG போன்ற பல நிறுவனங்கள் இந்நிறுவனப் பங்குகளை வைத்துள்ளது. மேலும் டிலிஜென்ட் பவர் நிறுவனத்திற்குக் கார்பரேட் உத்தரவாதம், கடன் போன்ற அனைத்திற்கும் ப்ரோமோட்டார்கள் உத்தரவாதம் கொடுத்துள்ளனர்.

கோல் இந்தியா

கோல் இந்தியா

DB Power நிறுவனம் கோல் இந்தியா லிமிடெட் உடனான எரிபொருள் விநியோக ஒப்பந்தங்களின் ஆதரவுடன் 923.5 மெகாவாட்டிற்கான நீண்ட மற்றும் நடுத்தரக் கால மின் கொள்முதல் ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது.

கிரிஷ் அகர்வால்

கிரிஷ் அகர்வால்

அனைத்திற்கும் மேலாக டிபி பவர் லாபகரமாகக் கிரிஷ் அகர்வால் தலைமையில் இயங்கி வருகிறது.சர்வதேச அளவில் நிலக்கரி விலை கடந்த ஆண்டில் மும்மடங்கு அதிகரித்த பிறகு தற்போது சிறிது தணிந்துள்ளது, இதனால் மின்சார உற்பத்தியை அதிகரிக்க மே மாதத்தில் நிலக்கரி இறக்குமதி பில் 156 சதவீதம் அதிகரித்து 10.2 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

லாபம்

லாபம்

டிபி பவர் நிறுவனம் 2021-22 ஆம் நிதியாண்டில் 3488 கோடி ரூபாய் அளவிலான விற்றுமுதல் கொண்டு உள்ளது. 2021ஆம் நிதியாண்டில் அதன் வரிக்கு பிந்தைய லாப அளவுகள் 312 கோடி ரூபாயாக உள்ளது. மேலும் இந்நிறுவனம் சுமார் 5500 கோடி ரூபாய் அளவிலான கடன்களைக் கொண்டு உள்ளது.

ஒரு மெகாவாட் - 6 கோடி ரூபாய்

ஒரு மெகாவாட் – 6 கோடி ரூபாய்

இந்த மதிப்பீட்டின் பார்த்தால் அதானி பவர் ஒரு மெகாவாட் மின்சாரத்தை 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாங்குகிறது. இது சமீப காலங்களில் இந்தத் துறையில் விலையுயர்ந்த ஒப்பந்தமாகப் பார்க்கப்படுகிறது. இது அதானி பவர் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயமாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Adani Power buying DB Power’s thermal power assets for Rs 7,000 crore

Adani Power buying DB Power’s thermal power assets for Rs 7,000 crore கௌதம் அதானி-யின் ரூ.7000 கோடி டீல்.. முதலீட்டாளர்களே உஷாரா இருங்க..!

Story first published: Saturday, August 20, 2022, 14:36 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.