ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன.
முதல்வர் ஆவதற்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்த
மெரினா கடற்கரையில், தர்மயுத்தம் தொடங்கினார்.
அதே சமயம் சசிகலா ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக பதவியேற்றார். இதன் பிறகு சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்ல நேர்ந்தது.
சசிகலா இல்லாத நிலையில் எடப்பாடி பழனிச்சாமி ஒருபுறம், ஓ.பன்னீர்செல்வம் மறுபுறம் என இருவரும் வரிந்துகட்டிக்கொண்டு நின்றதால் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து பாஜக தலையிட்டு, ஓபிஎஸ் மற்றும் எடப்பாடியை சமாதானப்படுத்தி இணைய செய்தது. இதன் பிறகு அடுத்து வந்த தேர்தல்களில் ஏறி சவாரி செய்வதற்கு ஏதுவாக கூட்டணியை அதிமுகவுடன் பாஜக உறுதி செய்தது.
அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி இருந்து வந்த நிலையில் நடந்து முடிந்த சட்டபேரவை தேர்தலில் ஆட்சியை இழந்தனர்.
இதன் பின்னர் கட்சியில் எனக்கு தான் அதிக செல்வாக்கு என இருவருமே மார்தட்டியதால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கலகமாக மாறியது. இதை எதிர்பார்க்காத, எடப்பாடி பழனிச்சாமி கட்சியை கைப்பற்ற முடிவு செய்தார்.
இதன் தொடர்ச்சியாக அதிமுக பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் பலரை தன்னுடன் சேர்த்துக் கொண்டு, கட்சியின் பொதுக் குழு கூட்டத்தை கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி நடத்தினார்.
அப்போது எடப்பாடி பழனிச்சாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அறிவிக்க செய்தார். இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து அதிமுக அலுவலகத்தை சூறையாடியதாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுகவை விட்டே, எடப்பாடி பழனிச்சாமி நீக்கினார்.
இவ்வாறு நடைபெறும் என்பதை முன்பே கணித்து இருந்த ஓ.பி.எஸ் அதிமுகவுக்கு உரிமை கோரி நீதிமன்றத்தை நாடினார். ஆரம்பத்தில் வழக்கு விசாரணையில் பின்னடைவு ஏற்பட்டாலும் பிறகு ஓபிஎஸ்சுக்கு சாதகமாக மாறியது.
வழக்கு விசாரணை முடிவடைந்து நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்த நிலையில் சமீபத்தில் தீர்ப்பை வழங்கினார். அதில், ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது.
மேலும் கட்சியின் விதிப்படி பொதுச்செயலாளர், ஒருங்கிணைப்பாளர் அல்லது இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க முடியும்.
அவை தலைவர் அழைப்பு விடுக்க முடியாது. அவர், பொதுக்குழு கூட்டம் தான் நடத்த முடியும். ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்து நிறைவேற்றிய தீர்மானம் ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல் ஜூன் 23ம் தேதிக்கு முன் கட்சியில் என்ன நிலை இருந்ததோ அதே நிலைதான் தற்போது நீடிக்க வேண்டும் என நீதிபதியின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதன் மூலம், எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் அவருடைய ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், சூட்டோடு சூடாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்வதாக எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அனுப்பிய கடிதத்தை ஏற்றுக்கொள்ளுமாறு தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுத முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்த சூழலில் தான், எடப்பாடி பழனிச்சாமிக்கு அரசியலில் மரண அடி கொடுக்கும் விதமாக உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அதிமுக பொதுக்குழுவை சசிகலா தலைமையில் கூட்ட ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.
அப்படி அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டால், ஒட்டு மொத்த பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என்றும், இதற்கான வேலையில் ஓபிஎஸ் தீயாய் இறங்கி இருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புலிப் பாய்ச்சல் போடும் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிரடி நடவடிக்கைகளை பார்த்து எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மிரண்டுபோய் கிடப்பதாக அதிமுக நிர்வாகிகளே சொல்லி சிரிக்கின்றனர்.