அமெரிக்காவின் முன்னணி டெக் நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்கப் பணிநீக்கம் செய்து வரும் நிலையில் இந்தியாவில் இதன் தாக்கம் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
இந்தியா ஐடி சேவை நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்கப் பணிநீக்கம் செய்யாமல் ஊழியர்களின் சம்பளத்தைக் கட் செய்யத் துவங்கியுள்ளது.
இது ஊழியர்களைப் பெரிய அளவில் பாதிக்கத் துவங்கியுள்ளது.
ஐடி ஊழியர்கள் சோகம்.. 70% சம்பள உயர்வு கதையெல்லாம் மலை ஏறிவிட்டது..!
டாப் 4 ஐடி நிறுவனங்கள்
இந்தியாவைப் பொறுத்த வரையில் டாப் 4 ஐடி நிறுவனங்களும் வர்த்தகத்தைப் பிடிப்பதில் குழாயடி சண்டை போட்டுக் கொண்டாலும் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம், சலுகைகளை ஒற்றுமை காட்டும் என்பது அனைவருக்கும் தெரியும்.
அந்த வகையில் தற்போது இந்திய ஐடி நிறுவனங்கள் டார்கெட் செய்துள்ளது ஊழியர்களின் வேரியரபிள் பே.
டிசிஎஸ்
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் தனது ஊழியர்களின் வேரியபிள் பே தொகையை அளிப்பதை ஒரு மாதம் தள்ளி வைத்துள்ளது. விப்ரோ நிறுவனத்தைப் போல் அளவை குறைத்தும், முழுமையாக ரத்து செய்யும் பணிகளைச் செய்யுமா என்ற அச்சம் எழுகிறது.
ஆனால் டிசிஎஸ் இதற்கு முக்கியமான விளக்கம் கொடுத்துள்ளது.
வேரியபிள் பே
இந்திய ஐடி சேவை துறையில் வருவாய் அடிப்படையில் பெரிய நிறுவனமாக இருக்கும் டிசிஎஸ் நிறுவனம் ஜூன் காலாண்டுக்கான பர்பாமென்ஸ் போன்ஸ் அல்லது வேரியபிள் பே தொகையை ஜூலை மாதம் அளிக்க வேண்டும், ஆனால் இன்னும் அளிக்கப்படாமல் ஆகஸ்ட் மாதம் வரையில் ஒத்திவைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஐடி ஊழியர்கள்
மேலும் டிசிஎஸ் தற்போது C3A, C3B, C4 ஆகிய பிரிவுகளைச் சார்ந்த ஐடி ஊழியர்களுக்கான வேரியபிள் பே ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இதனால் இப்பிரிவு ஊழியர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்துக் காத்திருந்த தொகை கிடைக்காமல் உள்ளது அவர்களுக்குச் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விப்ரோ
இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களின் ஒன்றான விப்ரோ அதன் நடுத்தர மற்றும் மூத்த நிலை ஊழியர்களுக்கு வேரியபிள் பே நிறுத்த முடிவு செய்துள்ளது. இதே நிலையில் புதிய மற்றும் இளநிலை ஊழியர்களுக்கு 30 சதவீத பிடிக்கப்பட்ட பின்பு வேரியபிள் பே தொகையை அளிக்க உள்ளதாக முடிவு செய்துள்ளது.
இன்போசிஸ்
மேலும் இன்போசிஸ் தனது வேரியபிள் பே-க்கான அறிவிப்புகளைச் சில அணிகளுக்கு இன்னும் வழங்கப்படாமல் உள்ளது எனப் புலம்பத் துவங்கியுள்ளது. அதாவது ஆகஸ்ட் 15 முதல் 18 வரையிலான தேதிகளில் அளிக்கப்பட வேண்டி வேரியபிள் பே தொகை அறிவிப்புகள் இன்னும் வழங்கப்படவில்லை.
காரணங்கள்
விப்போர் தனது ஊழியர்களுக்கான பேரியபிள் பே குறைக்க முக்கியக் காரணமாக மார்ஜின் பிரச்சனையைக் கூறிய நிலையில், டிசிஎஸ் இந்தத் தாமதத்திற்குக் காரணமாக லாப அளவுகளைக் குறிப்பிடவில்லை, இதற்கு மாறாக ஊழியர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் காரணத்தால் அனைவருக்கும் பரிசீலனை செய்வதில் தாமதமாகியுள்ளது என விளக்கம் கொடுத்துள்ளது.
சிறிய அளவிலான ஊழியர்கள்
இதேபோல் சிறிய அளவிலான ஊழியர்களுக்கு மட்டுமே இன்னும் வேரியபிள் பே அளிக்கவில்லை என்பதையும் தெரிவித்துள்ளது. இதனால் பெரும்பாலான ஊழியர்கள் ஜூன் காலாண்டுக்கான வேரியபிள் பே ஏற்கனவே பெற்றுள்ளனர் என்பதும் தெரிகிறது.
TCS delays June quarter variable pay for few bands of IT employees
TCS delays June quarter variable pay for few bands of IT employees டிசிஎஸ்-ன் முக்கிய அறிவிப்பு.. அழாத குறையில் ஊழியர்கள்.. என்ன நடந்தது..?!