சென்னை
:
சமீபத்தில்
ரிலீசாகி,
ரசிகர்களிடம்
வரவேற்பை
பெற்றுள்ள
படங்கள்
கார்த்தியின்
விருமன்
மற்றும்
தனுஷின்
திருச்சிற்றம்பலம்.
இந்த
இரு
படங்களுமே
விமர்சன
ரீதியாகவும்,
வசூல்
ரீதியாகவும்
வெற்றி
படங்களாகவே
பார்க்கப்படுகின்றன.
விருமன்
மற்றும்
திருச்சிற்றம்பலம்
படங்கள்
இரண்டும்
ஒரு
வார
இடைவெளியில்
ரிலீசாகி
உள்ளன.
விருமன்
படம்
ஆகஸ்ட்
12
ம்
தேதியும்,
திருச்சிற்றம்பலம்
படம்
ஆகஸ்ட்
19
ம்
தேதியும்
ரிலீசாகின.
கார்த்திக்கு
2019
ல்
ரிலீசான
கைதி
படத்திற்கு
பிறகு
நல்ல
வரவேற்பை
கொடுத்துள்ள
படம்.
கைதி
படத்திற்கு
பிறகு
கார்த்தி
நடித்த
தம்பி,
சுல்தான்
படங்கள்
சொல்லிக்
கொள்ளும்
அளவிற்கு
வரவேற்பை
பெறவில்லை.
இதே
போல்
தனுஷிற்கும்
கர்ணன்
படத்திற்கு
பிறகு
அவர்
நடித்த
ஜகமே
தந்திரம்,
அத்ரங்கி
ரே,
மாறன்
போன்ற
படங்கள்
சரியான
வரவேற்பை
பெறவில்லை.
இரண்டு
படங்களும்
காப்பியா?
நீண்ட
காலத்திற்கு
பிறகு
கார்த்தி,
தனுஷ்
இருவரின்
படங்களுமே
ரசிகர்களிடம்
வரவேற்பை
பெற்றுள்ளதை
கோலிவுட்டே
கொண்டாடி
வருகிறது.ஆனால்
இவை
இரண்டின்
கதையும்
ஏறக்குறைய
ஒன்று
தான்.
ஆனால்
எது,
எந்த
படத்தின்
காப்பி
என
தெரியவில்லையே
என
நெட்டிசன்கள்
புதிய
பிரச்சனை
ஒன்றை
கிளப்பி
விட்டுள்ளனர்.
விருமன்
Vs
திருச்சிற்றம்பலம்
விருமன்
படத்தில்
கார்த்தியின்
அப்பா
பிரகாஷ்
ராஜ்.
தாசில்தாரான
பிரகாஷ்
ராஜிற்கும்
அவரது
நான்காவது
மகனான
கார்த்திக்கும்
பல
வருட
பிரச்சனை.
அப்பா
-மகன்
உறவை
சொல்வது
தான்
விருமன்
படத்தின்
கதை.
திருச்சிற்றம்பலம்
படத்திலும்
இதே
கதை
தான்.
அப்பா
–
மகன்
ஆரம்பத்தில்
மோதல்,
கடைசியில்
பாசத்தை
புரிந்து
கொண்டு
ஒன்று
சேர்வது.
ஒரே
கதை
தான்
விருமன்
–
திருச்சிற்றம்பலம்
இரண்டிலும்
அப்பா
பிரகாஷ்
ராஜ்
தான்.
விருமனில்
தாசில்தார்,
திருச்சிற்றம்பலத்தில்
போலீஸ்
அதிகாரி.
விருமனிலும்
பிரகாஷ்
ராஜால்
கார்த்தியின்
அம்மா
மற்றும்
அத்தை
இறந்து
போவார்கள்.
திருச்சிற்றம்பலத்திலும்
அதே
தான்.அப்பா
–
மகன்
பிரச்சனைக்கு
இடையே
ஹீரோவிற்கு
துணையாக
நிற்பது
விருமனில்
மாமா
ராஜ்கிரண்,
திருச்சிற்றம்பலத்தில்
தாத்தா
பாரதிராஜா.
இதை
கூட
கவனிக்கலியா
விருமனில்
ஹீரோயின்
உறவுக்காரப்
பெண்.
திருச்சிற்றம்பலத்தில்
சிறு
வயது
ஃபிரண்ட்.
முதலில்
அப்பாவுடன்
மோதுவது,
பிறகு
அப்பாவிற்காக
ஓடுவது
என
பல
விஷயங்கள்
ஒன்றாக
உள்ளது.
இரு
படங்களிலும்
பல
இடங்களில்
லாஜிக்
இடிக்கிறது.
இப்படி
ஒரே
மாதிரி
கதையம்சம்
கொண்டதாக
இருப்பதால்
தான்
இந்த
இரு
படங்களும்
காப்பி
என
நெட்டிசன்கள்
கிளப்பி
விட்டுள்ளனர்.
இது
தான்
பிச்சனைக்கு
காரணம்
இன்னும்
சிலர்,
பிரகாஷ்
ராஜ்
ஒரு
நல்ல
நடிகர்.
அவரை
சரியாக
பயன்படுத்த
தற்போதுள்ள
இளம்
டைரக்டர்களுக்கு
தெரியாததால்
தான்
இது
போன்ற
பிரச்சனைகள்.
இயல்பான
நடிப்பு
மற்றும்
நகைச்சுவையுடன்
வில்லத்தனத்தை
அசால்டாக
செய்யக்
கூடியவர்
பிரகாஷ்
ராஜ்.
ஆசை,
கில்லி,
சிவகாசி,
ஐயா
என
பல
படங்களை
பிரகாஷ்
ராஜின்
வில்லன்
நடிப்பிற்கு
சொல்லிக்
கொண்டே
போகலாம்.ஆனால்
விருமன்
மற்றும்
திருச்சிற்றம்பலத்தில்
இரு
கேரக்டர்களையும்
வித்தியாசப்படுத்தி
காட்ட
டைரக்டர்கள்
தவறியதால்
தான்
காப்பி
என்ற
பிரச்சனை
ஏற்பட்டுள்ளதாக
சொல்லப்படுகிறது.