நவம்பர் 2020 முதல் கோவிட்-19 தொற்று சீனாவை தாண்டி உலக நாடுகளில் வேகமாகப் பரவத் துவங்கிய போது உலகையே ஸ்தம்பிக்க வைத்தது. இந்தத் தொற்றுநோய் உலகம் முழுவதும் பேரழிவைப் உண்டாக்கியது என்றால் மிகையில்லை, கடந்த 50 ஆண்டுகளில் இதுபோன்ற பேரழிவை யாரும் பார்த்து இல்லை.
கொரோனா தொற்று உலகளவில் முழுமையாக நீக்கப்படாவிட்டாலும் தடுப்பூசிகள் மற்றும் சரியான கவனிப்பு மூலம் பெரிய அளவிலான பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சீனாவில் மனிதர்களைத் தாண்டி மீன், இறால் மற்றும் நண்டு ஆகியவற்றுக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான வீடியோ வெளியானதில் இருந்து உலக நாடுகள் பீதி அதிகரித்துள்ளது.
டிசிஎஸ்-ன் முக்கிய அறிவிப்பு.. அழாத குறையில் ஊழியர்கள்.. என்ன நடந்தது..?!
சீனா
சீனாவில் கடந்த 6 மாதமாகக் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, இதேபோல் உலக நாடுகளிலும் கொரோனா, Monkeypox போன்ற புதிய வைரஸ் தொற்றுப் பரவி வரும் வேளையில் மக்கள் மத்தியில் மீண்டும் அச்சம் தலை தூக்கியுள்ளது.
ஜியாமென் பகுதி
இந்த நிலையில் சீனாவின் ஜியாமென் பகுதியில் கொரோனா வழக்குகள் அதிகரித்துள்ள காரணத்தால் 50 லட்சத்திற்கும் அதிகமானோருக்குக் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மீன், இறால் மற்றும் நண்டு
இருப்பினும், சோதனை மனிதர்களுக்கு மட்டும் அல்லாமல் ஜியாமென் பகுதியின் அரசு அதிகாரிகள் கடல் உணவுகளான மீன், இறால் மற்றும் நண்டு ஆகியவற்றுக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டு வருகிறது.
வீடியோ
சவுத் சைனா மார்னிங் போஸ்ட் ட்விட்டரில் பகிர்ந்த வீடியோவில், ஜியாமென் பகுதியின் அரசு சுகாதாரத் துறை அதிகாரிகள் மீன் மற்றும் நண்டு போன்ற கடல் உணவுகளைக் கோவிட் -19 வைரஸுக்கு பரிசோதிப்பதைக் காட்டுகிறது.
ஸ்வாப் டெஸ்ட்
சுகாதாரப் பணியாளர்கள் பிபிஇ கருவிகளை அணிந்து கொண்டு மீன்களின் வாய் மற்றும் நண்டுகளின் ஓடுகளுக்குள் கொரோனா டெஸ்ட் செய்யப்படும் ஸ்வாப்களைத் தடவும் வீடியோ வெளியாகியுள்ளது.
மக்கள் அச்சம்
மீன், இறால் மற்றும் நண்டு ஆகியவற்றுக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்படும் வீடியோ சீனா-வை தாண்டி உலகளவில் காட்டுத்தீ போலப் பரவி வருகிறது. இதை வீடியோ பார்க்கும் பலர் கொரோனா தொற்று மனிதர்களிடம் இருந்து உயிரினங்களுக்குக் குறிப்பாக உணவாகும் உயிரினங்களுக்குக் கொரோனா தொற்று பரவுகிறதா என்ற கேள்வி எழுகிறது.
கமிஷன் போர்-ஐ துவங்கிய ஜியோ.. முகேஷ் அம்பானி திட்டம் என்ன..?
fish, crabs undergo Covid-19 tests in China’s Xiamen
fish, crabs undergo Covid-19 tests in China’s Xiamen பயமுறுத்தும் சீனா.. மனிதர்களுக்கு மட்டும் அல்ல மீன்-களுக்குக் கொரோனா டெஸ்ட்..!