தனியார் பள்ளிகளைப் போல் அரசு பள்ளிகளில் போதிய கட்டமைப்புகள் இல்லாத சூழலே இன்னும் நிலவுகிறது. இதுநாள் வரை அரசு பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணிகளை அரசு பள்ளி மாணவர்களே செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அரசு பள்ளிகளில் பள்ளி மாணவர்களை தூய்மைப்படுத்த வைப்பது தொடர்பாக பள்ளி கல்வி துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு இன்று பள்ளிக் கல்வித்துறை அரசு முதன்மைச்செயலாளர் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், பள்ளியில் மரங்கள் இருந்தால் அதில் இருந்து உதிரும் இலைகளால் குப்பைஉண்டாகிறது. மழைக்காலங்களில் இக்குப்பைகள் மழையில் நனைந்து கட்டிட உறுதிக்கு பாதிப்பு ஏற்பத்தும் வகையிலுள்ளது.அதனால், இலைகளையும் சருகுகளையும் அகற்ற வேண்டும்.தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகாத வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
பள்ளி வளாகத்தைச்சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பள்ளி மாணவர்களைஇந்தச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தக் கூடாது.இதற்கு உள்ளூர் மக்கள் அல்லது, 100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தில் பணிபுரிபவர்களைக் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
பள்ளியில் அறிவிப்புப் பலகையில்நடமாடும் மருத்துவக்குழு, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் செல்வியர்களின் தொலைபேசி எண்களையும் எழுதப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கை பள்ளி கல்வித்துறை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.