பாகிஸ்தானிலிருந்து டிரோன்கள் மூலம் ஆயுதங்கள் விநியோகம் செய்யப்படுவதாக தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதையடுத்து, தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் நேற்று காஷ்மீரில் அதிரடி சோதனை நடத்தினர்.
ஜம்மு-காஷ்மீர், பாகிஸ்தானில் இயங்கிவரும் பயங்கரவாத அமைப்புகள் டிரோன்கள் மூலம் காஷ்மீரின் சர்வதேச எல்லையில் ஆயுதங்கள், வெடிப் பொருள்களை வீசி வருவதாகவும், காஷ்மீரில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு இந்த ஆயுதங்கள் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அண்மையில் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிரோன்கள் மூலமாக ஆயுதங்கள் விநியோகிக்கப்படுவதாகக் கூறப்படும் பகுதிகளான ஜம்மு, ஸ்ரீநகர், கதுவா, சம்பா மற்றும் தோடா உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நேற்றைய தினம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
ஆனால், சோதனை குறித்த தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.