வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தாக்குதல் நடத்துவோம் என பாகிஸ்தானில் செயல்படும் தொலைபேசி எண்ணில் இருந்து வந்த மிரட்டல் தொடர்பாக மும்பை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ம் தேதி கடல் வழியாக வந்து மும்பைக்குள் ஊடுருவிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 10 பேர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில், 18 பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். பாதுகாப்பு படையினர் திருப்பி தாக்கியதில் 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டான். விசாரணைக்கு பிறகு, 2012 நவ.,21ல் தூக்கில் போடப்பட்டான். இதனை தொடர்ந்து மும்பையில் தீவிர கண்காணிப்பு கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், ராய்காட் மாவட்டத்தில் ஹரிஹரேஸ்வரர் கடற்கரையில் மர்ம படகு ஒன்று கரை ஒதுங்கியது. அதில், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், அந்த படகு ஆஸ்திரேலியாவை சேர்ந்தது எனவும், கடந்த ஜூன் மாதம் விபத்தில் சிக்கியதால், கைவிடப்பட்ட அந்த படகு தற்போது கரை ஒதுங்கியது தெரியவந்துள்ளதாக மஹாராஷ்டிரா மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியிருந்தார்.
இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து ‘வாட்ஸ் ஆப் செயலி’யில்செயல்படும் மொபைல் எண்ணில் இருந்து மும்பை போலீசாருக்கு மிரட்டல் செய்தி வெளிவந்துள்ளது. அதில், கடந்த 2008 ம் ஆண்டு நடந்த தாக்குதல் போல் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும். 6 பேர் தாக்குதல் நடத்துவார்கள் எனக்கூறியுள்ளதுடன், 2008 ம் ஆண்டு நடந்த தாக்குதல் குறித்து பேச்சுக்களும் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளதுடன், இது குறித்து விசாரணையை துவக்கி உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement