மதுபானக் கொள்கை விவகாரத்தில் மணீஷ் சிசோடியா வழக்கில் அமலாக்கத்துறை தனது விசாரணையை துவக்கியுள்ளது.
தற்போது சிபிஐ அதிகாரிகளிடம் வழக்கு விவரங்களை அமலாக்கத்துறை கேட்டுள்ளது. சட்டவிரோத பண பரிவர்த்தனை குறித்து அமலாக்கத்துறை விரைவில் தீவிர விசாரணை நடத்தும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மதுபான விற்பனை கொள்கை முறைகேட்டில் கையூட்டு பணம் எப்படி பரிவர்த்தனை செய்யப்பட்டது என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
மதுபானக் கொள்கை முறைகேட்டால் டெல்லி அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. மதுபான வியாபாரிகள் தங்களுக்கு சாதகமான கொள்கையைப் பெற கையூட்டு அளித்ததாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை அவசரமாக ரத்து செய்யப்பட்டது என்பது குறித்தும் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரண்டு நபர்களுக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் மணீஷ் சிசோடியாவுக்கு சம்மன் அனுப்பப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். 21 இடங்களில் நடைபெற்ற சிபிஐ சோதனையில் கிடைத்துள்ள பணப்பரிமாற்ற ஆதாரங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.
– கணபதி சுப்ரமணியம், ச.முத்துகிருஷ்ணன்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM