மத்திய மின் அமைச்சகம் மின் உற்பத்தியாளர்களுக்கு ரூ.5,085 கோடி நிலுவை தொகை செலுத்தாததற்காக 13 மாநிலங்களுக்கு ஸ்பாட் சந்தையில் இருந்து மின்சாரம் வாங்கவோ விற்கவோ வியாழக்கிழமை தடை விதித்துப் பெரும் அதிர்ச்சியை அளித்த அதேவேளையில் மற்றொரு அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
மத்திய மின் அமைச்சகம் 13 மாநிலங்கள் மீது விதித்த தடை உத்தரவு வெளியிட்டு ஒரு நாளில் சுமார் 80 சதவீத நிலுவை தொகை குறைந்துள்ளது.
இதன் மூலம் தடைக்கு முன்பு இருந்த 5,085 கோடி ரூபாய் நிலுவை தொகை அளவு தற்போது 1,037 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
டிசிஎஸ்-ன் முக்கிய அறிவிப்பு.. அழாத குறையில் ஊழியர்கள்.. என்ன நடந்தது..?!

மின்சாரம் விதிகள் 2022
மின் அமைச்சகத்தின் ஒரு அமைப்பான பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் (POSOCO) முதல் முறையாக மின்சாரம் விதிகள் 2022 ஐ பயன்படுத்தி டிஸ்காம் அதாவது மாநில அரசின் மின்சாரப் பகிர்மான நிறுவனங்களை ஸ்பாட் சந்தையில் இருந்து மின்சாரம் வாங்கவோ விற்கவோ வியாழக்கிழமை தடை விதித்து.

தமிழ்நாடு
இதில் தமிழ்நாட்டின் மின்சாரப் பகிர்மான நிறுவனம், மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டிய நிலுலை தொகை 926 கோடி ரூபாய். இந்த 13 மாநிலங்களில் தெலுங்கானா தான் அதிகப்படியான நிலுவை அதாவது 1,381 கோடி ரூபாய் அளவிலான நிலுவை தொகையை வைத்திருந்தது.

80% சரிவு
வெள்ளிக்கிழமை முடிவில் வெளியான தகவல்கள் படி பெரும்பாலான மாநிலங்கள் நிலுவைத் தொகையைச் செலுத்திய காரணத்தால் நிலுவை தொகை அளவு தற்போது 1,037 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.

கர்நாடகா, தெலுங்கானா
இதன் மூலம் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இருந்து கர்நாடகா, தெலுங்கானா மீதான தடை நீக்கப்பட்டு உள்ளது. இதேவேளையில் மத்திய பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், ராஜஸ்தான், மிசோரம், தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்கள் வெள்ளிக்கிழமை இரவு தரவுகள் படி மின் பரிமாற்றங்களில் வர்த்தகம் செய்வதிலிருந்த தடை உத்தரவு நீடிக்கிறது.

தமிழ்நாடு மீது தடை
மேலும் ஜம்மு மற்றும் காஷ்மீரின் தற்போதைய நிலுவைத் தொகை அதிகபட்சமாக ₹435 கோடியாகவும், மத்திய பிரதேசம் ₹234 கோடியாகவும் உள்ளது. இவ்விரு மாநிலங்கள் தான் அதிகப்படியான நிலுவை தொகை உடன் முதல் இரண்டு இடத்தில் உள்ளது. தமிழ்நாடு மிகவும் குறைந்த அளவிலான நிலுவை தொகை மட்டுமே வைத்துள்ளது.

6 மாநிலங்கள்
வியாழன் பிற்பகுதியில், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய ஆறு மாநிலங்கள் நிலுவை தொகை எதுவும் இல்லை என்று கூறியதால் மின்சார வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்து வெள்ளிக்கிழமை நள்ளிரவு தரவுகள்.
Electricity discom dues fall by 80 percent in a day after exchange ban; Check Tamilnadu Status
Electricity discom dues fall by 80 percent in a day after exchange ban; Check Taminadu Status மின்சார நிலுவை தொகை: ஓரே நாளில் 80% சரிவு.. தமிழ்நாட்டின் நிலை என்ன..?!