மும்பையின் அடையாளமான டபுள் டெக்கர் பேருந்துகள் 19600களில் நகரெங்கிலும்அழகாக வலம்வந்தன. ஆனால் பின்னாள்களில் அவை வழக்கொழிந்தன. மும்பைவாசிகளுடன் டபுள் டெக்கர் பேருந்துகளின் 70 ஆண்டுகால காதலை அவ்வளவு எளிதாக கடந்துசெல்ல முடியாது.
இந்தக் காதல் தற்போது மீண்டும் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆம், மும்பையின் அங்கமான டபுள் டெக்கர் பேருந்துகள், அதுவும் சுற்றுச்சூழலுக்கு தீங்கிழைவிக்காத எலக்ட்ரானிக் பேருந்துகள் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 18) மீண்டு(ம்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மும்பையில் முதன் முதலாக டபுள் டெக்கர் பேருந்துகள் 1937இல் ஆங்கிலேயர்கள் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தப் பேருந்துகள் லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்டன. 1960களில் மும்பை நகர வீதிகளில் கிட்டத்தட்ட 900 டபுள் டெக்கர் பேருந்துகள் இயங்கின.

இந்தப் பேருந்துகள் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களை காந்தம் போல் ஈர்த்தன. இந்தப் பேருந்துகளின் உயரம் பயணிகளுக்கு புதுவித அனுபவத்தை கொடுத்தது. குறிப்பாக தெற்கு மும்பை அமைதியாக அதேநேரம் இயற்கை எழில் கொஞ்சும் விதத்தில் இருக்கும்.
இதை ரசிக்கவே பலரும் டபுள் டெக்கர் பேருந்துகளில் ஏறிய காலம் உண்டு. இதைப் பலரும் இன்றளவும் நினைவு கூர்கின்றனர். இந்தப் பேருந்துகளில் 1960களில் கிட்டத்தட்ட 26 வழித்தடங்களில் இயக்கப்பட்டன.
பேருந்துகளை பொறுத்தமட்டில் தெற்கு மும்மை மற்றும் மும்பை புறநகர் பகுதிகளில் பயணிகள் கூட்டம் காணப்படும். இதற்கிடையில் 1970களில் மும்பையில் ஆட்டோ ரிக்ஷாக்கள் அறிமுகமாகின.
இதுவும் டபுள் டெக்கர் பேருந்தின் தேவையை அதிகமாக உயர்த்தியது. இந்தப் பேருந்துகளில் முதலில் ஆங்கில எழுத்துக்கள் மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டன. பின்னாள்களில் மக்கள் தேவை அதிகரிக்க அதிகரிக்கவே உள்ளூர் நிறுத்தங்களின் பெயர்களும் அச்சிடப்பட்டன.
முதலில் சி (C) என ஆங்கிலத்தில் வழங்கப்பட்ட பேருந்து 123 ஆனது. இந்தப் பாதையில் ஆர்சி சர்ச், கொலாபா காஸ்வே, ரீகல் சினிமா, ஃப்ளோரா ஃபவுண்டன், மரைன் டிரைவ் ஆகியவற்றை கடந்து பேருந்து பயணித்தது.
மற்றொரு பிரபலமான பாதை 130 வழித்தடம் ஆகும். இந்தத் தடத்தில் ஃபோர்ட் மார்க்கெட், க்ராஃபோர்ட் மார்க்கெட், பைடோனி ஆகிய பகுதிகள் உள்ளன. மேலும் நகரத்தின் இரவு வாழ்க்கைக்குரிய பகுதிகளும் உள்ளன.
டபுள் டெக்கர் பேருந்துகள் ஏன் வழக்கொழிந்தன
டபுள் டெக்கர் பேருந்துகள் காலப்போக்கில் வழக்கொழிந்தன. அதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இருப்பினும் உதிரி பாகங்கள் கிடைக்காதது முதல் காரணமாக பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து பேருந்தின் அதிக கனம் ஒரு பிரச்னையாக பார்க்கப்பட்டது. இதன் காரணமாக எளிதில் மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்ல முடியவில்லை. மேலும் டபுள் டெக்கர் பேருந்துகள் அதிக பாரம் காரணமாக எரிபொருளை அதிகம் உபயோகித்தன.
இதனால் நிதி தேவை அதிகம் தேவைப்பட்டது.
இது பலராலும் கூறப்பட்ட பிரதான காரணம் ஆகும். இதற்கிடையில், பிரிட்டிஷ் ஆட்சியின் போது அறிமுகப்படுத்தப்பட்டதால், பேருந்துகள் அனைத்தும் டெய்ம்லர், ஏஇசி (அசோசியேட்டட் எக்யூப்மென்ட் கம்பெனி) மற்றும் லேலண்ட் மோட்டார்ஸ் போன்ற வெளிநாட்டு உற்பத்தியாளர்களால் வழங்கப்பட்டன.
1955 ஆம் ஆண்டு வரை அசோக் லேலண்ட் என்ற இந்திய நிறுவனம் அவற்றைத் தயாரிக்கத் தொடங்கியது. டபுள் டெக்கர் பேருந்துகளை இயக்குவதற்கு அதிக பணியாளர்கள் தேவைப்படுவதாகவும், மேல்தளத்திற்கு கூடுதல் நடத்துனர் தேவை என்றும் பெஸ்ட் கூறியது.
இப்போது, 48 டபுள் டெக்கர் பேருந்துகள் மட்டுமே எஞ்சியுள்ளன, அவை 2023-க்குள் படிப்படியாக நிறுத்தப்படும். தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பேருந்துகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை ஆகும்.

இந்தப் பேருந்துகளின் பராமரிப்பு மற்றும் இயக்க செலவை நடத்துனர் பார்த்துக் கொள்வார்.
இந்தப் பேருந்துகள் முழுவதிலும் குளிரூட்டப்பட்ட நவீனமயமாக்கலில் இருக்கும். தானியங்கி கதவுகள், சிசிடிவி கேமராக்கள் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் இடையே சென்சார் தொடர்பு என உள்ளன.
இது குறித்து பேருந்து ஆர்வலர் அசோக் தாதர், ”இந்தப் பேருந்துகள் சொத்துகளை போன்றவை. ஏனெனில் இவற்றில் இரு மடங்கு பயணி்களை ஏற்றிச் செல்ல முடியும்” என்றார்.
ஆகஸ்ட் 18ஆம் தேதி தொடங்கப்பட்ட எலக்ட்ரானிக் மின்னணு டபுள் டெக்கர் பேருந்துகள் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியால் தொடங்கிவைக்கப்பட்டது. தொடர்ந்து எலக்ட்ரானிக் டபுள் டெக்கர் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“