பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் கூட்டமைப்பின் 3 பேரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பாக பொலிஸ் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் நேற்று முன்தினம் (18) மாலை கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 16 பேர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று (19) ஆஜார் படுத்தப்பட்டனர்.
இதன் போது 15 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஒருவர் 2022.08.26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார் ஏனைய மூவர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் பொலிஸ் அதிகாரியினால் வழங்கப்படும் 72 மணித்தியாள தடுப்பு காவலில் வைக்கப்படும் உத்தரவின் கீழ் வைக்கப்ட்டு விசாரணை மேற்கொள்ளப்படுவதுடன் இந்த சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் தடுப்பு காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக, தடுப்பு காவல் உத்தரவை பெற்றுக்கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சுக்கு சம்பந்தப்பட்டட அதிகாரியினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக முரண்பட்ட தகவல்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு நேற்று மாலை (19) வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.