சென்னை: மதுபோதையில் மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த போதை ஆசாமி மகாலிங்கம்(57) மேச்சேரியில் கைது செய்யப்பட்டார். நேற்று இரவு சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மேட்டூர் அணையில் குண்டு வெடிக்கும் என்று கூறியுள்ளார். மிரட்டல் விடுத்த நபர் பேசிய செல் எண்ணை தொடர்பு கொண்டபோது செல்போன் ஆப் செய்யப்பட்டிருந்தது.
