”தமிழகத்துக்கு வாங்கிய மின்சாரத்துக்கான பணம் ரூ.850 கோடி செலுத்திவிட்டோம். எனவே, தமிழ்கத்தில் மின்வெட்டு வராது” என்று தமிழக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அன்றாடம் வீடுகளில் வழங்கப்படும் மின்சாரத்திற்கான கட்டணத்தை கட்டத் தவறும் பட்சத்தில், வீடுகளில் மின்இணைப்பு துண்டிக்கப்படும். அதே போன்ற நிலை தான் தற்போது 13 மாநிலங்களுக்கு நிகழ்ந்துள்ளது.
அதாவது, மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு கட்டண பாக்கி வைத்துள்ள 13 மாநிலங்கள் தங்கள் அவசர தேவைக்கு மின்சாரம் வாங்க முதன்முறையாக இதுபோன்ற தடையை விதித்துள்ளது, பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (POSOCO). இந்த 13 மாநிலங்களும் கூட்டாக சுமார் 5,085 கோடி கட்டண பாக்கியை மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டும்.
இந்த நிலையில், இந்த மாதம் தமிழகத்தின் சார்பில் செலுத்த வேண்டிய தொகை ரூ.926 கோடி. இதில் ரூ.850 கோடி ஏற்கெனவே செலுத்தியாகி விட்டது. இது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று விளக்கம் தந்துள்ளது. மின் கட்டணத்தை உரிய நேரத்தில் கட்டும்படி சொல்லும் மின் வாரியமே காலம் தாழ்த்தி பணம் கட்டுவது சரியா என மக்கள் கேட்கத் தொடங்கி இருக்கின்றனர்.