சென்னை: மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் – லோகேஷ் கனகராஜ் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளனர்.
இன்னும் டைட்டில் உறுதியாகாத இப்படத்திற்கு, தற்காலிகமாக ‘தளபதி 67’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், ‘தளபதி 67’ டீம் செம்ம ட்ரெண்டிங்கில் உள்ளது.
மாஸ்டர் கொடுத்த நம்பிக்கை
கைதியை தொடர்ந்து விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ். விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்த இப்படத்திற்கு, அனிருத் இசையமைத்தார். கொரோனா பரவலால் 50 சதவித பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்றிருந்த நிலையில், 200 கோடிக்கும் மேல் வசூலித்து மாஸ் காட்டியது. இதனால், லோகேஷ் – விஜய் இருவருக்குமான நெருங்கிய நட்பு ஏற்பட்டது.

எதிர்பார்ப்பில் தளபதி 67
‘மாஸ்டர்’ படத்திற்குப் பின்னர் கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சூர்யா என மெகா கூட்டணியுடன் ‘விக்ரம்’ படத்தை இயக்கினார் லோகேஷ். இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதோடு, வசூலிலும் மாஸ் காட்டியது. இதனைத் தொடர்ந்து விஜய்யுடன் மீண்டும் இணைந்தார் லோகேஷ். தற்போதைக்கு ‘தளபதி 67’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது.

கண்டிப்பாக ப்ளாக் பஸ்டர் தான்
மாஸ்டர் படத்திற்கான ஸ்கிரிப்ட்டை அவசர அவசரமாக எழுதியதால், சில தவறுகள் நடந்துவிட்டதாக லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். ஆனால், தளபதி 67 படத்தில் அப்படி எதுவும் நடந்துவிடாதபடி, ஸ்கிரிப்ட்டை மெருகேற்றி வருவதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்தார். விஜய் தற்போது ‘வாரிசு’ படத்தில் நடித்து வருவதால், ‘தளபதி 67’ படத்தில் அவர் நடிக்க வரும் முன்னர், ஸ்கிரிப்ட்டிங் ஒர்க் முடிந்துவிடும் என தெரிகிறது.

டிரெண்டிங்கில் தளபதி 67
விஜய் ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பே, ‘தளபதி 67’ படத்தின் சூட்டிங் எப்போது தொடங்கும் என்பது தான். இதுகுறித்து லோகேஷிடம் பலமுறை கேட்கப்பட்ட போதும், விரைவில் அபிஸியல் அப்டேட் வரும் என மட்டுமே அவர் கூறி வருகிறார். இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட ‘தளபதி 67’ குழுவினரை விஜய் திடீரென சந்தித்துள்ளார். அந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.