சென்னை:
விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டது.
விநாயகர் சதுர்த்தி இந்தாண்டு வரும் 31-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டது.
அதில், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை நீர் நிலையில் கரைக்க கூடாது. பிளாஸ்டர் ஆப்பாரிஸ் (பி.ஒ.பி), பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல்(பாலிஸ்டிரின்) கலவையில் செய்யப்பட்ட சிலைகளை கரைக்க கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும். சிலைகளுக்கு ஆபரணங்கள் தயாரிப்பதற்காக உலர்ந்த மலர்கள்,. வைக்கோல், மரங்களின் இயற்கை பிசினை பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வர்ணம் பூச செயற்கை ரசாயன வர்ணங்களை பயன்படுத்தக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.