சென்னை: களிமண்ணால் செய்த, பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக் கலக்காத விநாயகர் சிலைகளை மட்டுமே கரைக்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. சிலைகளின் ஆபரணங்களை தயாரிக்க உலர்ந்த மலர்கள், வைக்கோலை பயன்படுத்தலாம். சிலைகளுக்கு வர்ணம் பூச நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது என தெரிவித்தது.