கலிபோர்னியா : அமெரிக்காவில் இரண்டு சிறிய ரக விமானங்கள் தரையிறங்க முயன்றபோது நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் பலியாகினர்.அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வாட்சான்வில்லே என்ற நகரில் சிறிய விமான நிலையம் உள்ளது.
இந்த நகரம், சான்பிரான்சிஸ்கோ நகரில் இருந்து, 160 கி.மீ., தொலைவில் உள்ளது. நேற்று இங்கு இரண்டு சிறிய ரக விமானங்கள் ஒரே நேரத்தில் எதிர் எதிர் திசையிலிருந்து வந்து தரையிறங்க முயன்றன.தரையிறங்குவதற்கு முன்பே எதிர்பாராத விதமாக நடுவானில் இரண்டு விமானங்களும் நேருக்கு நேர் மோதி, விமான நிலையத்திற்குள் நொறுங்கி விழுந்தன.
இதில், ஒரு விமானத்தில் இருந்த பைலட், சம்பவ இடத்திலேயே பலியானார்.மற்றொரு விமானத்தில் இருந்த பைலட் உட்பட இருவர் இறந்தனர். இந்த விமானத்தில் இருந்த நாயும் பரிதாபமாக இறந்தது; விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:வாட்சான்வில்லே நகரில் விமான நிலையத்தில் போதிய வசதி இல்லை.
குறிப்பாக, விமானங்கள் தரையிறங்குவதையும், புறப்பட்டுச் செல்வதையும் கண்காணிக்க, ‘கன்ட்ரோல் டவர்’ எனப்படும் கட்டுப்பாட்டு கோபுரம் இல்லை. இதனால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம். விபத்தை நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவல்கள் அடிப்படையில் விசாரணை நடக்கிறது.இவ்வாறு கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement