சென்னை: அதிமுக ஆட்சியில் நடந்த ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒரு நபர் ஆணைய தலைவர் டேவிதார் அறிக்கை தாக்கல் செய்து ஆலோசனை நடத்தி வருகிறார். ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி 3 மாதத்துக்குள் அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, சேலம் உட்பட 11 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
