டேராடூ்ன்: ஹிம்மாச்சல், ஒடிசா மற்றும் உத்ரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது .நதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவில் மொத்தமுள்ள 30 மாவட்டங்களில், சுமார் 20 மாவட்டங்கள் கனமழை கொட்டி தீர்த்தது. இன்று(ஆக.,20) 17 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்றும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஒடிசாவில் ஏற்ப்பட்டுள்ள இந்த கனமழை மக்களை கடும் அவதிக்கு உள்ளாக்கியுள்ளது.
பாதிப்புகள்: ஒடிசா மாநிலத்தின் பத்து மாவட்டங்களில் 4.67 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,757 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. சம்பல்பூர், சுபர்னாபூர், பௌத், கட்டாக், குர்தா, ஜகத்சிங்பூர், கேந்திரபாரா மற்றும் பூரி ஆகிய இடங்களில் உள்ள பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. கோத்ரா மாவட்டத்தில், வெள்ளத்தால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
ஹிம்மாச்சல் பிரதேசம்:
ஹிம்மாச்சலில் கங்காரா, சம்பா, பிலாஸ்பூர், சிர்மூர், மண்டி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கங்கரா மாவட்டத்தில், ஆற்றின் மேல் கட்டப்பட்டிருந்த ரயில்வே பாலம் உடைந்து விழுந்தது. மேலும் நிலச்சரிவு, வெள்ள பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மிரில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சேனாப் ஆற்றில் கடும் வெ ள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் திரிபுரா மலையில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
உத்ரகாண்ட்: உத்தரகாண்டில் ராய்பூர் – குமால்டா பகுதியில் இன்று (ஆக.,20) அதிகாலை ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
அடித்துச் செல்லப்பட்ட பாலம்
வெள்ளம் காரணமாக சாங் நதியில் கட்டப்ப்பட்ட பாலம் அடித்துச் செல்லப்பட்டது. சுற்றுலா தளங்கள் பலவற்றில் வெள்ள நீர் கரை புரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. கிராம மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. மால்தேவ்தா, புட்ஸி, தௌலியாகாதல், தத்யுட், லவர்கா, ரிங்கல்காத், துட்டு, ராகத் காவ்ன் மற்றும் சர்கெட் ஆகிய கிராமங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. வெள்ளம் காரணமாக ராய்பூர் – குமால்டா தேசிய சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்